பக்கம்:சகுந்தலா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சகுந்தலா தன் தவறு அவனுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. அடடா என்று மனம் திடுக்கிட்டு வருக்திலுைம், ஒப்புக் காகச் சொல்லி வைத்தான் ப்சா, யாரு வந்து என்னத்தை எடுத்துப் போயிடப் போருங்க! அப்படித் தூக்கிக்கொண்டு போகத்தான் என்ன இருக்கு இங்கே?' என்று. 冷 முதல் தடவை உள்ளே வந்த போதே பெரிய புஸ்தகமாகப் பார்த்து ஒண்ணே எடுத்திட்டுப் போயிருக்கணும். அப்போ தெரியும் அவள் இதழ்களில் மட்டும் சிரிப்பு மலர்வதில்லை, குக் கண்களிலும் தனிசகச் சிரிப்பு ஒளிர்கிறது என்பதை எடுத்துச் சொன்னது அவன் ரசனே உள்ளம். ஒகேன்! என்று கூவினுள் அவள். அப்படீன்னு நான் முதல்லே ஒரு தட்வை வந்தியா? ஏன் ? என்ருன் உங்ககிட்டே கிறையப் புஸ்தகங்கள் இருக்குதோ ? இன்ஹஇம். அப்படி ஒண்னும் அதிகமில்லையே!” சும்மா சொல்லாதீங்க. மாடியிலே புத்தகங்களேத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியலியே. எங்கே பார்த்தாலும் பீரோ பீரோவாகப் புஸ்தகம் தான் ! கீ மாடிக்குப் போனியா? என்று பரபரப்புடன் விச சித்தான் அவன். - உஹஇங். இரண்டு விட்டு மாடிக்கும் பின்னலே பொது வசன வசாண்டா இருக்குதே. அப்படி வந்து ஜன்னல் வழி யாக எட்டிப் பார்த்தால் தான் தெரியுதே. நீங்கள் மச்சிலே புழங்குவதே யில்லே போலிருக்கு. உங்களே ஒருதடவை: கூட அங்கே பார்க்க முடியலியே!” - - உலகின் இந்த அறிவிப்பு அவன் எதிர்பாராத விஷயம் தான். ஆகவே திகைத்துப் போனுன் ஒரு கணம். அந்தப் பெரிய வீட்டில் தன்னக் தனியனுகக் காலம் தள்ளும் அவனுக்கு மாடியை உபயோகிக்க வேண்டிய அவசியம் அதிகம் ஏற்படுவதில்லே. ஆகையில்ை மாடி அறை அறுவடை காலத்திலே கெல் குவித்து வைக்கவும், நெல் இல்லாத போது இதர சாமான்களைப் போடவும்தான் அதிகம் பயன் பட்டது. கீழ்ப் பகுதிகள் வசதிகள் கிறைந்திருந்ததனுல், படுப்பதற்காவது மாடியை உபயோகிக்கலாமே என்ற தேவை கூட ஏற்படவில்லே. மாடியிலும் மேஜை நாற்காலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/82&oldid=814838" இலிருந்து மீள்விக்கப்பட்டது