பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv



சங்கத் தமிழும் அவ்வரிகளுக்கு உரம் பாய்ச்சி நிற்கின்றது. அவ்வகையில் இந்நூலினைப் பாட்டிடையிட்ட ஒர் உரை நடைக் காவியத் தொகுப்பு எனலாம். இப்பண்புகளோடு இதில் திரு. சஞ்சீவி மிக்க மதிப்புடன் அடுத்து கெருங்கிப் பழகிய டாக்டர். மு. வ., திரு. வி. க. அவர்களின் நடை நயங்களும் இடையிடையே தோய்ந்து சொட்டிக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்புக்களோடு அமைந்துள்ள இந்நூல் தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் கலை பயிலும் மாணவர் கற்கும் தமிழில் ஆர்வமிக்கவர்கட்கும் எல்லையற்ற இன்பமும் அறிவும் ஊட்டும் என்பதில் ஐயமில்லை. திரு. சஞ்சீவி இலக்கியத் துறையில் இத்தகைய முயற்சிகளில் மேலும் மேலும் ஈடுபட்டுத் தமிழன்னையின் சேவையில் தலை சிறந்து விளங்கவேண்டுமென்பது எனது அவா.


பச்சையப்பர் கல்லூரி,

ம. சண்முகசுந்தரம்

காஞ்சிபுரம், 1-7-54