பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சங்ககாலத் தமிழ் மக்கள்


'பிறந்த வீட்டிலிருந்து நுகரும் இனிய தேன் கலந்த பாலைக்காட்டிலும், என் தலைவனுடன் சென்ற காலத்து பருகிய மான உண்டு எஞ்சிய கலங்கற் சின்னீர் எனக்குப் பெரிதும் சுவையுடையதாயிற்று எனத் தமிழ் நங்கையொருத்தி கூறுகின்றாள்.[1] கணவன் குடும்பமோ, வறுமை திலையடைந்தது. பெண்ணின் தந்தையோ, மிகப் பெரிய செல்வமுடையவன். தந்தை தன் மகள் வீட்டிற்கு வேண்டிய உணவு முதலிய பொருள்களை நிறையக் கொடுத்தனுப்பினான் தந்தையின் பொருளைப் பெற்றுத் தாம் இனிதாக வாழ்தல் தகுதியன்று எனவுணர்ந்த தலைவி அப்பொருளைக் கொள்ளாது, தன் கணவன் ஈட்டிய சிறு பொருளை வைத்துக்கொண்டு ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்டு தன் குடும்பத்தைப் போற்றி வரும் செம்மை பெற்றாள்,' என்ற அருமையான நிகழ்ச்சி நற்றினைப் பாடலிற் (110) குறிக்கப் பெறுகின்றது. தம் குடும்பத்தின் வறுமையினைத் தந்தைக்கும் புலப்படுத்திக்கொள்ளாத செம்மனச் செல்வியாாய்த் தமிழ் மகளிர் வாழ்ந்தமை மேற்காட்டிய குறிப்பினால் நன்கு புலனும் தேவருலகத்தில் நகரப் பெறும் இன்பத்தைவிடத் தம் கணவனுடனிருந்து நகருந் துன்பம் மிகவும் இனியதென்பது தமிழ் மகளிர் கருத்து. குடும்ப வாழ்க்கையில் உண்டாகுதந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு தம் கடமையைச் செய்யுந் திறம் தமிழ் மகளிரின் தனிச் சிறப்பாகும்.

தம்முடைய செல்வமனையை நீங்கி வெளியே நடந்தறி. யாத பேரெழில் வாழ்க்கையினராகிய கண்ணகியார், தம் கணவனாகிய கோவலன் 'மதுரைக்குப் புறப்படுக,' என்ற அளவில் உடனே புறப்பட்டுக் கால்கோப்புளங் கொள்ளும் படியாகக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்கு


  1. 1. ஐங்குறு நூறு 203.