பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

149

நாலும் விரும்பத் தக்கதும், கெடுதலில்லாத விளைவினை உடையதும், அரசியலுக்கு வேண்டும் வரிப்பொருளை நிரம்பக் கொடுக்கும் வளம் வாய்ந்ததும் ஆகிய நிலப்பகுதியே நாடு எனச் சிறப்பித்துரைக்கப்படுவதாம். மிக்க பசியும், நீங்காத நோயும், கலக்கத்தைத் தரும் பகைமையும் ஆகிய மூவகைத் தீமைகளும் சேராது இனிது நடப்பதே நாட்டின் சிறப்பியல்பாகும், என ஆசிரியர் திருவள்ளுவனார் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

அயல் காட்டவர் தமிழ் நாட்டிற் குடி புகுந்தமையால் தமிழகத்தில் என்றுமில்லாத கிறவேற்றுமையும் சமய வேற்றுமையுந்தோன்றி, மக்களைப் பல்வேறு குழுவினராகப் பிரித்து, மாறுபாட்டினை விளைவித்தன. அவற்ருல் தமிழ்மக்களின் அரசியல் நெறியைச் சிதைக்கும் உட்பகை களும் நாளடைவிற்ருேன்றலாயின. நாட்டில் மக்களைத் துன்புறுத்தும் குறும்பர்களாகிய கொடியவர்களும் ஆங் காங்கே புகுந்து தீமை விளக்கத் தொடங்கினர்கள். இத்தகைய இடர்நிலையினை யுணர்ந்த ஆசிரியர் இம்மூவகைத் தீமைகளையும் அடியோடு விலக்கிய நாடே மக்கள் அமைதி யாக வாழ்தற்கேற்ற ஆக்கமளிப்பதென நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திப்போந்தார்."

பசியும் பிணியும் பகையும் நீங்கி மக்கள் இசை பெருக இன்புற்றுவாழும் இடமாக இத் தமிழகம் அமைய வேண்டுமென்பதே பண்டைத் தமிழ் புலவர்களின் உட்கோளாகும். இக்கருத்தினால், அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட எண்ணங்கள் வருங்காலத் தமிழர் வாழ்வினை

  • 'பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங்

கொல்குறும்பும் இல்லது நாடு.'-- குறள்.735.