பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

151

முறைகளையும் நன்கு ஆராய்ந்து, தமிழ் மக்களது நல் வாழ்க்கையினை வளர்த்து வந்தார்கள். 'மருந்து' என்ற அதிகாரத்தினhல் மக்கள் நோயின்றி நீடு வாழ்தற்குரிய இயற்கை முறைகளைப் பொய்யில்புலவர் நன்கு புலப்படுத்துகின்றாார், 'பல்யானைச் செல்கெழுகுட்டுவன்’ என்னும் சேர மன்னன், அரசியல் நெறிக்குத் தடையாகிய வெகுளி, காமம், அச்சம், பொய் முதலிய தீமைகளை அகற்றி, மாந்தர் ஒருவரையொருவர் நலியாமலும் பிறருடைய பொருளை விரும்பாமலும் தூய அறிவினையுடைய சான்றோர் செம்மை நெறியில் நின்று தம் வாழ்க்கைத் துணையைப் பிரியாமல் தம் இல்லிருந்து நல்லறஞ் செய்து முதிர்ந்த யாக்கையுடன் நோயின்றி வாழ ஆட்சி புரிந்தான்,' எனப் பாலைக் கெளதமனார் என்பார் பதிற்றுப்பத்திற் பாராட்டுகின்றார். அரசர்கள் முறை தவறாது ஆட்சி புரிதலால் வேண்டும்பொழுது மழை பெய்ய, நோயும் பசியும் நீங்கி நாடு பொலிவு பெற்றது எனப் புலவர் பலரும் பாராட்டியுரைக்கும் பாடல்கள் அக்காலத் தமிழகத்தின் அரசியற் செம்மையினை நன்கு விளக்குவனவாம்.

வேந்தர்களது போர்த்திறமையைப் பாராட்டப்போந்த புலவர்கள், அப்பாராட்டுதலுடன் போரினாற் பகைவர் நாடு பாழாயின செய்தியையும் எடுத்துக் கூறிவருந்துகின்றார்கள். வெற்றியால் மகிழ்ந்த வேந்தருள்ளத்தில் பகைவர் நாட்டின்பால் அருளினைத் தோற்றுவிக்கும் பொருளுடையனவாகப் புலவர்கள் பாடிய செய்யுட்கள், புலவர்களின் இரக்கவுணர்ச்சியினை இனிது விளக்குவனவாம். போரின்றி அமைதியாக வாழும் ஆட்சி முறையின் இனிமையினைத் தமிழ்ப் புலவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்