பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சங்ககாலத் தமிழ் மக்கள்



பாராட்டிப் போற்றுகின்றார் [1] . ‘அரசர் பெருமானது திருமேனியாய் விளங்கும் சேனாமுகம் வாழ்க!’ எனப் பறையறைவோன் செங்குட்டுவனையும் அவனுக்கு உடம்பாய் விளங்கிய சேனையையும் வாழ்த்தியதாக இளங்கோவடிகள் கூறுவர் [2]. மன்னனது உடம்பாய் விளங்கிய தமிழ்ப்படை வீரர்கள் கூற்றுவனே வெகுண்டு போருக்கு வந்தாலும் மனம் விரும்பி எதிர் நின்று பொருது வெல்லும் ஆற்றலுடையவர்களாய்த் திகழ்ந்தார்கள் [3]. இத்தகைய தறுகண்மை மிக்க தமிழ் வீரர்களாற்சூழப்பெற்ற மன்னர் தாம் எண்ணியது முடிக்குங் திண்மை பெற்று விளங்கினர். தம் முன்னேற்றத்திற்கு இயற்கையே தடையாய் நின்றாலும், அதனை மாற்றித் தாம் நினைத்தது முடிக்கும் ஆற்றல் தமிழ் வேந்தர்பால் நிலைபெற்றிருந்தது. சங்ககாலத்தில் வாழ்ந்த கரிகால் வளவன் எண்ணியது முடிக்குந் திண்ணியனாய் விளங்கிய திறத்தைப் பட்டினப்பாலைப் பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது :

“மலைஅகழ்க் குவனே! கடல்தூர்க் குவனே !
வான்வீழ்க் குவனே !! வளிமாற் றுவன்!'எனத்
தான்முன் னிய துறை ”


  1. ‘நின்னொடு தொன்று மூத்த வுயிரினும் உயிரொடு
    நின்று மூத்த யாக்கை யன்னநின்
    வாளின் வாழ்கர் ’
    –புறம். 242 .

  2. ‘தாழ்கழல் மன்னன் தன் திரு மேனி
    வாழ்க சேனா முகமென வாழ்த்தி......
    அறைபறை யெழுந்ததால் அணிநகர் மருங்கென்.'

    -சிலப். காட்சி. 191-94

  3. கூற்றுடன்று மேல்வரினும் கூடி யெதிர்கிற்கும்
    ஆற்ற லதுவே படை."
    -குறள் 765.