பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

51


மலைவாணர் தம் மகளிர் வேறுபாடு தீர முருக பூசை செய்யும் வேலன் என்பானை அழைத்து வெறியாடச் செய்வர். கடம்பமரத்தினை முருகன் விரும்பும் தெய்வ மரமாகக் கொண்டு, அதன் அடியில் சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களைப் பூசி, மாலை சாற்றி, நறும்புகை தந்து வழிபடுதலும், அதன் அடியில் இளமகளிர் கைகோத்து நின்று முருகனை வாழ்த்திக் குரவையாடுதலும், அருவி நீரைக் குடித்து முருகன் முன்னர்ச் சூளுரைத்தலும், மலைவாணர் வழக்கங்களாம்.

வேனில் வெப்பத்தால் நீரும் நிழலுமின்றி வளங் குறைந்து மக்கள் இயங்குதற்கரிய வெம்மை மிக்க சுரத்திலே வாழும் எயினர்கள் வழிப் போக்கர்களைத் துன்புறுத்தி அவர்கள் படும் துயர் கண்டு மகிழும் கொடியவர்களாய் இருந்தார்கள். இந்நிலத்தின் வழியாகப் பொருள் தேடச் செல்லும் வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலாகப் போர் வீரர் குழுவினையும் உடனழைத்துப் போதல் மரபு. வணிகர்க்குப் பாதுகாவலாகச் செல்லும் வீரர் படை ‘சாத்து’ என்ற பெயராற் குறிக்கப்பட்டது. இப்படையைச் சார்ந்தவன் ‘சாத்தன்’ என வழங்கப் பெற்றான்.

முல்லை நிலத்து வாழ்வார் இடையர் என வழங்கப் பெறுவர். இங்நிலத்து ஆனிரைகள் மிகுதியாய் உண்மையால், அவற்றைப் பசுமை நிலங்களில் மேய்த்துக் காப்பாற்றும் தொழில் அவர்களுக்கு உரியதாயிற்று. ஆவினை மேய்ப்பார் ‘ஆயர்' என வழங்கப் பெற்றனர். புனத்தை உழுது விளைக்கும் வரகு முதலியன இங்நிலத்தவர்க்குரிய உணவுகளாம். இவர்கள் திருமாலைத் தங்களுக்குரிய தெய்வமாக வழிபட்டார்கள்; வரகுக் கற்றைகளால் மேலே வேயப்பட்டிருக்கும் குடிலில் வாழ்ந்தார்கள் ; தோல்