பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சங்ககாலத் தமிழ் மக்கள்

பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசை காட்டும் கல்லை நிறுத்தி, அக்கல்லிலே அவ்வழி செல்லும் ஊர்ப்பெயரையும் எழுதியிருந்தனர். ஆங்கே பலவூர்க்குச் செல்வாரும் சிறிது நேரம் இளைப்பாறுதல் இயல்பாதலின், அவர் வழிபடுதற்குரிய கடவுள் அம்பலம் அமைக்கப் பெற்றது.

“செல்லுந் தே எத்துப் பெயர்மருங்கு அறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த
கடவு ளோங்கிய காடேசு கவலை."[1]

எனப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் கூறுவதனால் இவ்வுண்மை தெளியலாம்.

கடத்தற்கரிய பேராறுகளை எளியோரும் கடந்து செல்லுதல் கருதி, எல்லாரிடமும் கூலி பெறாது அறங்கருதி நீர்த்துறைகளில் ஓடங்கள் செலுத்தப் பெற்றன. 'அறத்துறை அம்பி' எனப் புறநானூற்றிற் குறிக்கப்படுவது (புறம். 381) இத்தரும ஓடமேயாகும்.

ஒரு நிலத்து மக்கள், தங்கள் நிலத்திற்கிடைக்கும் பொருள்களை மற்றவரிடம் கொடுத்து, அவர்கள்பால் உள்ளவற்றைப் பண்டமாற்று முறையில் வாங்கினார்கள்.

இளம்பருவத்து ஆடவர்களும் மகளிரும் தங்கள் உடல் அமைதிக்கேற்றபடி நன்றாக விளையாடினார்கள். இளைஞர்கள் விளையாடாது சோம்பியிருத்தல் அவர்களுடைய உடல் வளர்ச்சியினையும் உள்ளத் திண்மையினையும் சிதைக்கும் எனப் பெற்றோர் அறிவுறுத்தினர்.

இறந்தார் உடம்பினைத் தாழியிற்கவித்துப் புதைத்தலும், விறகிட்டு எரித்தலும் ஆகிய இரு வகைப் பழக்கங்களும் தமிழரிடையே நிலவின. வீரர்கள் போர்க்களத்தில்{rule}}

  1. மலைபடுகடாம், 394-96,