பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சங்ககாலத் தமிழ் மக்கள்



மனைவியுடன் மகிழ்ந்து இல்லிருந்து நல்லறம் செய்தற்கேற்ற பொருளை ஈட்டுதல் ஆடவர்களின் கடமையாகும். வறுமையின் கொடுமையால் பசி நீங்க வாழ முடியாக இரவலர்களுக்கு வேண்டும் பொருளைக்கொடுத்து ஆதரித்து அறம் செய்தலும், தமக்கடங்காத பகைவரை வென்றடக்குதலும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்பம் நுகர்தலும் ஆகிய உலகியலில் நிகழும் எல்லாச் செயல்களும் பொருளால் நிகழ்தற்குரியனவே. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’, என்ருர் திருவள்ளுவர். ஆகவே, தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளைத் தேடுதல் ஆடவரின் கடமையாயிற்று. தன் முயற்சியால் வந்த பொருளைக்கொண்டே ஒருவன் தன் வாழ்க்கையினை நிகழ்த்துகல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை. ஒரு தொழிலும் செய்யாது தன் முன்னோர் தேடி வைத்த பொருளைக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவன் உயிருடையவனாகக் கருதப்படுவதில்லை. மணங்கொள்ளுமுன் பெற்றோரது ஆதரவின் கீழ் வாழ்ந்த மகன், உரிய பருவம் வந்ததும் தன் மனத்திற்கினிய மங்கையை மணந்து வாழ விரும்புகின்றான். அவன் தான் விரும்பிய மங்கையை மணம் செய்துகொள்ளுதற்குரிய பொருளைப் பெற்றோரிடம் வேண்டிப் பெறுவதில்லை. தனது திருமணத்தை முன்னிட்டுப் பொருளீட்டக் கருதியாவன் வேற்று நாடு செல்வது வழக்கம். இதனை ‘வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிதல்’ என்பர். தலைவன் மணந்து கொண்ட பின்னரும் பொருளீட்டுதற்கென மனைவியைப் பிரிந்து செல்லுதல் உண்டு. ‘இரப்பார்க்கு இல்லையென்று. சொல்வதைவிட இறத்தலே மேல்’, என்பது தமிழர்களது எண்ணமாகும். அறம்புரி நெஞ்சத்தவராய்த் தமிழ் நாட்டு ஆடவர் வாழ்ந்தனர். மனைக்கண் மனைவியுட-