பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

83

மானால், அது தன் வளம் கெட்டுச் சிதையுமென்பர். ஆற்றிலே நீந்தி விளையாடிய இளநங்கை ஒருத்தி கை தளர்ந்து வெள்ளத்தின் வழியே செல்ல, அது கண்ட இளைஞன் ஒருவன் துடுமென ஆற்றிற்குதித்து அவளைக் கரையேற்றிக் காப்பாற்றினான். தன்னைக் காப்பாற்றிய ஆடவனையே தான் மணந்துகொள்ள வேண்டுமென்பது அந்நங்கையின் விருப்பம். அவ்விருப்பத்தை உணர்ந்துகொள்ளாத தந்தையும் தமையன்மாரும் அவளை வேறொருவர்க்கு மணஞ் செய்யக் கருதினர். தலைமகளது அன்புக்கு மாறாக அறம் அல்லன செய்யத் துணியும் அவர்கள் செயல் நாட்டின் இயற்கை வளத்தைச் சிதைத்துவிடும் என உணர்ந்த தோழி, “இம்மலையில் வாழ்வார் தம் மகளை அன்பினால் காப்பாற்றிய தலைவனுக்குக் கொடுக்க நினையாது அயலான் ஒருவனுக்குக் கொடுக்க நினைந்து அறத்துக்கு மாறாக நடந்துகொள்ளுவதால், இனி இம்மலை நிலத்தில் வள்ளிக் கிழங்கும் நன்றாக விளையா; மலைமேல் தேனடைகளும் தொடுக்கப்பட மாட்டா ; புனங்களில் தினைகளும் நிறைந்த கதிர்களை ஈனாவாம்!” எனச் செவிலித் தாயிடம் கூறி வருந்துகின்றாள் [1]. நிலத்தில் வாழும் நல்ல ஆடவர்களின் நினைவும் செயலும் பற்றியே அந்நிலம் வளம் பெறுதல் கூடுமெனப் பண்டைச் தமிழ் மக்கள் எண்ணினமை தோழியின் கூற்றால் நன்கு புலனாம்.

‘எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்ல வாழிய நிலனே !


  1. கலி. 39. புறம். 189,