பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 91.

யணிந்து, ஆனிரைகளைப் புல் நிறைந்த பரந்த வெளிகளில்: மேயவிட்டுவிட்டு, காட்டில் வீழ்ந்துகிடக்கும் மணிகளைப்

பொறுக்கிக் கொண்டு வருவர் :

'முல்லேக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறு உம் மிதியற் செருப்பின் பூழியர் கோவே. (பதிற்று உக)

பூழியர், மழவர், கொங்கர் ஆகிய மூவருள்ளும், மிகப் பேராற்றல் வாய்ந்தவர் மழவராவர் ; மழவர் சிறந்த குதி ரைப் படை உடையவர் ; விற்போரில் வல்லவர் ; எத்துணை நெடிய நாடுகளுக்கும் விரைவிற் சென்று வென்று மீளும் இயல்பினர்; அருள் உள்ளம் சிறிதும் இன்றி, ஆறலைத்துத் துயர் விளப்பர்; இம்மழவர்களால் அழிவுற்ற நாடுகள் பல; இதனல், இவர்களை வென்று, இவர்கள் ஆற்றலை அடக்கிய அரசரும் பலராவர் மழவர் இன்னாதல் அறிந்த பல் யானேச் செல்கெழு குட்டுவன், அவர்களைத் தன் தனவ ராய்க் கொண்டான் அவர்களும், உடலைக்காக்கத் துணை புரியும் கவசம் போலிருந்து, அவனுக்குத் துணைபுரிக்தனர் எனக் கூறுகிருர் புலவர் பாலேக் கெளதமனர் :

' குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை. (பதிற்று உக)

கொங்கர் என்பார், கொங்குநாட்டில் வாழ்ந்தவர்; கொங்கர், படை வன்மைவாய்க்கவர்; இவரும், பூழிநாட்டா ாைப் போன்றே ஆனிரை வளர்ப்பவராவர்; கெர்ங்குக,ே சே காட்டைச் சேர்ந்து விளங்கிய நாடாகலின், சோ வேந்தர் பலரும் அக்காட்டில் தம் அரசுகிலவுவதைப் பெரி தும் விரும்பியுள்ளனர்; கொங்குநாடு, மேட்டுநிலமாதலின், ஆங்கு ஆனிரைகளுக்கு வேண்டும் நீர் கிடைத்தல் அரிது; கொங்கர்கள் கூரிய் இரும்புக் கோடரிகளேக் கொண்டு கிலத்தை உடைத்து மிக ஆழமாய கிணறுகளைத் தோண்டி அவற்றுள் நீண்ட கயிறுகளில் சிறிய நீர்முகவைகளைக் கட்டிவிட்டுக் கொண்ட நீரைத் தம் ஆனிரைகளுக்கு அளிப் பர்; ஆக்கள் மிக்கு ஆப்பயனல் சிறந்த கொங்குநாட்டைப்