பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சேரர்

பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் கைக்கொண்டு ஆண் டிருந்தான்் :

பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தான்ே வெருவரு தோன்றல்.’ (பதிற்று உஉ)

உள்நாட்ப்ே போர்கொண்ட நாடு, உலகில் உயர்த்து தோன்றுவது இல்லை; தம் நாடு, உலக நாடுகளுள் உயர்ந்து தோன்றுவதை விரும்புவார், முதற்கண் தம் காடு, உள் காட்டுக் குழப்பத்திற்குள்ளாவதினின் ஆறும் தடுத்தல் வேண்டும் ; ப்ல்யானேச் செல்கெழுகுட்டுவன் இவ்வுண் மையை உணர்வான்; ஆகவே, அவன் பிற அரசர்களை வெல் லத் தொடங்குவதற்குமுன், தன் சோர் குடியில் தன்ளுேடு பிறந்தாரிடையே பகையெழாமையினே எண்ணி மேற் கொண்டான் ; சேரநாட்டில், தன் குடிவந்த பிறர்க்கு உரிய பகுதியை அவர் பால் ஒப்படைத்து உள்நாட்டில் அமைதி கிலவ வழிசெய்தான்் ; பல்யானேச் செல்கெழு குட்டுவன், பின்னர்ப் பேரரசனுய்ப் பலப்பல வெற்றிகளை எய்ததற்கு, அவன் தன் ஆட்சித்தொடக்கக் காலத்தே அறிவோடு செய்த இச்செயலே காரணமாயது.

வெற்றிபல பெற்று விளங்கிய பல்யானே ச் செல்கெழு குட்டுவன், தன் வெற்றிச்சிறப்பினே உலகம் வியக்கும் வகை விளக்கிக் காட்ட விரும்பினுன் , அதற்கு ஏற்ற வழி பாது என எண்ணிப்பார்த்து, இறுதியில், சுன் யானே களே, மேற்குக் கடலுக்கும், கிழக்குக் கடலுக்கும் ஒரே காலத் தில் கூட்டமாக அனுப்பி, அவ்விருகடல்நீரும் ஒருபகலி லேயே வருமாறு செய்து, அவ்வாறு அவை கொணர்ந்த அங்கீரிற் படிந்தாடிப் பெருமையுற்ருன் ; இருகடல்நீரும் ஒருபகல் ஆடிய பல்யானேச் செல்கெழு குட்டுவன், தன் ாட்டுக் கொற்றவையாகிய அயிரைக்கடவுளே வணங்கி * ன்; சேரநாட்டில் அயிரை என்ருேர் அழகிய மலையுண்டு;