பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - சேரர்

இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து, புலவர்தம் பாராட் டுரையும் பெற்றுச் சிறப்புற்ற சேர வேந்தன், இருபத் தைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, இறுதியில், நிறைந்த புகழும், உயர்ந்த கேள்வியும் உடைய நெடும் பாரதாயனர் என்னும் பெயருடைய தன் பேராசிரியர் அறிவுறுத்தத் துறவுள்ளம் உடையய்ை அவரைப் பின் தொடர்ந்து, நாடு விட்டுக் காடு சென்று நோற்று வீடு பேறடைந்தான்் :

இமைய வரம்பன் தம்பி, அமைவா உம்பற் காட்டைத் தன்கோல் கி.மீ.இ, அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு மதியுறழ் மரபின் முதியரைத் தழிஇக் கண்ணகன் வைப்பின் மண் வகுத்து ஈத்துக் கருங்களிற்று யானைப் புணர்நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடி/ - அயிரை பசைஇ, ஆற்றல்சால் முன்போடு ஒடுங்கா நல்லிசை, உயர்ந்த கேள்வி நெடும்பார தாயனர் முந்துறக் காடு போக்த பல்யானைச் செல்கெழு குட்டுவன் ’

(பதிற்றுப்பத்து, பதிகம் : க.)