பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சேரர்

யேற்று வாழாப் பெருவாழ்வையும் வேணடுவாயின், அதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது பொருளே எனப் பொருட்சிறப்பினேயும், பொருட்பயனே நுகர விரும்புவார் ஒவ்வொருவரும், அப்பொருளேத் தாமே ஈட்டுதல் வேண்டும் ; அவரே ஆள்வினேயுடையவராவர். இதற்கு மாருகத் தாம் ஒரு கொழிலும் செய்ப்ாது, தம் முன்னேர் ஈட்டிவைத்துள்ள செல்வத்தை அழித்து அதன் பயனை உண்டு வாழ்வார், உண்மையில் உயிருடையார் எனக் கருதவும்படார்; அவர் வாழ்வு, இரத்துண்போன் வாழ்வினும் இழிவுடைத்தாம் எனப் பொருளீட்டற் சிறப் பினேயும், பொருள் தேடுவார் எவ்வகையாலும் பொருள் சேர்த்தலே எம் குறிக்கோள் என்று எண்ணிவிடுதல் கூடாது. பொருள் ஈட்டத் தாம் மேற்கொள்ளும் செயல் தீமையுடைத்து, அறநெறியற்றது என்ற எண்ணமின்றிப் பொருளை ஈட்டின், அவர்கள் அப்பொருளால் ஆன்ற இன்பம் அடையார் ; மாருக, இம்மை மறுமை ஆகிய இரு நிலையினும் அவர்க்கு அப்பொருளே காங்கலாகத் துன்பங் களைத் தேடித்தரும் என அறநெறி கின்று பொருள் தேட வேண்டியதன் இன்றியமையாமையினேயும், ஈத்து உவக்கப் பயன்படும் செல்வமே செல்வம் இரந்தார்க்கு ஈயாது ஈட்டிய செல்வம் இழிவுடைச் செல்வமாம் எனப் பொருட் பயன் இஃது என்பதையும், இவர் உயர்ந்த பண்புடையார், ஆகவே இவர்பாற் செல்லுதல் வேண்டும் இவர் அப் ப்ண்பிலார், ஆகவே இவரை அகன்று வாழல் வேண்டும் என எண்ணுவதின்றிச் செல்வம், செய்தவப் பயனுக்கேற்ப எவரிடத்தும் சென்று சேரும் என, அதன் இயல்பினேயும், செல்வம் சேருங்கால் சிறப்பளித்துப் பிரியுங்கால் தம்மைப் பெற்றிருந்தார், தம்மைப் பெறுதற்கு முன் தாம் பெற் றிருந்த சிறப்பையும் அழித்துவிட்டு, பிறர் பெரிதும் எள்ள இழிவு செய்தே பிரியும் என, அதன் கிலேயாமை

னேயும் நன்கு உணர்ந்து உணர்த்தியுள்ளார்.

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலா அச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும்.” (அகம் : கடுடு)