பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. மருதம் பாடிய இளங்கடுங்கோ

பெருங்கடுங்கோ எனும் சேர வேங்கர் ஒருவர், பாலைத் திணையைப் பாடிப், பாலைபாடிய பெருங்கடுங்கோ எனப் பெயர் பூண்டதேபோல், இளங்கடுங்கோ என அழைக்கப் பெறும் இவரும், மருதத் திணையைப் பாடிய சிறப்பால் மருதம் பாடிய இளங்கடுங்கோ என அழைக்கப்பெற்று ளார். பெருங்கடுங்கோ எனவும், இளங்கடுங்கோ எனவும் அழைக்கப்பெறுவது ஒன்றையே கொண்டு இவர்கள் இரு வரும் அண்ணனும் தம்பியுமாவர் என முறை கற்பித்துக் கூறல் அத்துனே ப் பொருத்தமுடைத்தன்று. இளங் கடுங்கோ ஒரு சிறந்த புலவராவர் என்பதல்லது வேறு உணர்தற்கில்லை. அவர்டால் அமைந்துள்ள அரசப் பண்பு கள் யாவை என்பது அறியக்கூடவில்லை.

இளங்கடுங்கோ தம் காலத்தே நிகழ்ந்த பருவூர்ப் பறந்தலைப்போர் ஒன்றையும், அப்போரில் தன்னை எதிர்த்த சேர பாண்டியர் இருவரையும், சோழன் தான்் ஒருவ ஞகவே சின்று வென்றிகொண்ட சிறப்பையும் கூறி, வரலாற்றிற்கு ஒரு சிறிது அனே புரிந்துள்ளார் :

'அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்

வெண்ணெல் வைப்பின் பருஆர்ப் பறந்தலே இருபெரு வேந்தரும் பொருதுகளத்து ஒழிய ஒளிறுவாள் நல்லமர்க் கடந்த ஞான்றைக் களிறுகவர் கம்பலை.” (அகம் : கசு)

வரலாறு உனா ஒரளவு துணை புரிந்த இளங்கடுங்கோ, மக்களைப் பெற்று மனேயறங்காக்கும் மனேவியர்தம் மாண்பு எத்தகைத்து என்பதை உணரவும் துணை புரிந்துள்ளார்.

தன் மனேவி புதல்வனேப் பெற்றுப் பேணி வளர்த்துக் கொண்டு பெருமனைக் கிழத்தியாய் செல்வளம் கிறைந்த நெடிய தன் மனையில் வாழ்ந்திருக்க, பரத்தை வீடு சென்று வாழ்தலை விரும்பினுன் ஒர் ஆண்மகன். பரத்தையொடு