பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. மாந்தரம் பொறையன் கடுங்கோ

மாந்தரன், மாந்திரன் பொறையன் அக்ேகோ என் றெல்லாம் அழைக்கப்பெறும் இவன், சோருள், இரும் பொறை மரபில் வந்தவனுதல் வேண்டும் ; மாந்தரம் பொறையன் கடுங்கோவே, இரும்பொறை மரபினரின் முதல்வளுதல் வேண்ம்ே என ஆராய்ச்சியாளர் கருதுவர். இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பெருக்கு - கிழார், அவனே, மாத்தரன் வழிவந்தவன் எனக் கூறிய தொன்றன்றி வேறு சான்று அவர்க்கு இல்லை. இளஞ் சோல் இரும்பொறைக்கு முன் அரசாண்ட இரும்பொறை மரபினர் பலராதலின், அத்தொடர், அவ்வாறு ஆண்டா ருள், மாங் தான்ும் ஒருவளுவன் எனப்பொருள்படத் தினே புரியுமேயன்றி, அவனே, அவ்வின முதல்வளுவன் எனப் பொருள்கொள்ளத் துனே புரியாது; மாந்தரனே, இளஞ் சோல் இரும்பொறைக்கு முற்பட்டோன் எனக் கோடல் கூடுமேயன்றி, இரும்பொறை மாபில் வங் சார் அனேவர்க் குமே முற்பட்டவனுவன் எனக்கோடல் பொருந்தாது.

மாந்தரன் ஆண்ட நா,ே அவன் காலத்தே வாழ்ந்த பிற அரசர், அவன் பெற்ற வெற்றிகள், இன்ன பிற வரலாறுகள் எதையும் அறியம் சான்றுகள் கிடைத்தில.

மாங் தான்், வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ்ந்த வேந்தனவன் ; அவன் ஆட்சி, அறைெடு பட்ட சல்லாட்சி யாம்; அதனுல், அவன் ஆட்சிக்காலத்தே, கோள்களும், அவ்வவற்றிற்குரிய இடத்திலேயே இயங்கின; மழையும் தப்பாது பெய்தது ; அவன் நாட்டுமக்களும் அச்சம் அற்று வாழ்ந்தனர்; துன்பவாழ்வில் துயர் உருது, இன்ப வாழ்வினை இடையருது பெற்றனர்! மாந்தரன், அரசர்க்கு ஒதிய கல்வியை ஒன்றுவிடாது கற்றுச் சிறந்தான்்; ஆற்றல் மறவர்தம் அரும்போர் கண்டு அஞ்சா வாட்போர் வல்ல வேந்தர்கள், பணிந்து தந்த பல்லணியும், பலகளிலும் பெற்று மகிழும் பேராண்மையுடையவனுயினுன் ; உலகில், உள்ளமும், உரையும், உடல்புரி செயலும், ஒரு நாளும்