பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய்

என்றும், பூழிநாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும், அருவா காட்டார் செய்யைச் செறு என்றும், சிறுகுளத் தைக் கேணி என்றும், அருவா வடதலையார் புளியை எகின் என்றும், சீதநாட்டார் தோழனே எலுவன் என்.அம், தோழியை இகுளே என்றும் வழங்குவர்' என நன்னூல் விருக்கியுரை தார், அந்நாடுகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களைத் தமிழின் திசைச்சொற்கள் எனக் கொள்வ தையும், சேனவரையர் போன்ற உரையாசிரியர் பலரும், செந்தமிழ் சில மாவன வைகையாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற் குமாம எனக கூறுவதையும,

'முன்னுறுக் தென்பாண்டி முதற்புனல் சாடிருன

பன்னிரண்டு நாடும் அப்பால் நாடே ;-அங்காட்டுள் வையை, கருவை, மருதாறு, மருஆர் ஈடுவே ஐய வாழும் அரண்மனையோ ?

எனத் தமிழ் விடுதுது கூறுவதையும் ஒருங்கு நோக்கின், தமிழ்ச் சங்கம் தழைத்து வாழ்ந்த பாண்டிநாடே செங் தமிழ் நாடாகும் என்ற பொதுக்கொள்கைக் கிடையில், செங்கமிழ் நாடாம் சிறப்பு, சோணுட்டிற்கும் உண்டு என்ற கொள்கையும் சிலவியிருந்தது என்பது புலனும்.

சோழரும், அவர்க்குரிய சோணும்ெ, பண்டைத் தமிழ் நூல்களில் பாராட்டப் பெற்றிருத்தலோடு, பிற காட்டுப் பேரறிஞர் பலராலும் பெருமைப் படுத்தப் பெற் அறுள்ளன. கி. பி. 81-96-ல் எழுதப்பெற்ற பெரிபுளுஸ் மாரிஸ் எரித்ரியா' என்ற நூலில், கொற்கையை அடுத்து, கடலைச் சார்ந்து, கடற்கரைகாடு” என ஒன்றும், அர் கரு” என்ற உள்நாடு ஒன்றும் இருப்பதாகக் கூறப்பட் டுளது. இவையிாண்டும் முறையே, கடலைச் சார்ந்து விளங் கிய புகாரையும், உள்நாட்டு ஊராகிய உறையூரையும் தலை எகர்களாகக் கொண்டு அமைக்கப் பெற்ற இரு சோழ அரசுகளையே குறிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. மேலும், அரை நாற்ருண்டு கழித்து வாழ்ந்த மற்றொரு கில அால் பேராசிரியராகிய தாலமி என்பார், காவிரிகடலோடு