பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்

கலக்குமிடத்தில் இருக்கும் காவிரிப்பூம் பட்டினத்தைக் "கபெரீஸ்” எனவும், நாகப்பட்டனத்தை கிகாமா' என வும், சோழநாட்டுநகர் உறையூரை ‘ஒர்துரா ரெகியா சோ.நடி” எனவும் அறிந்து தம் நாஜில் குறித்துள்ளார். கி. பி. முதல்நூற்ருண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட, 'மிலிந்தா அரசனுடைய கேள்விகள்” என்ற புத்த நூல் ஒன்று, அக்காலக் கடற்கரைப் பட்டினங்களுள் சிறந்தன வாகக் கோளபட்டினம்’ என்ற ஒன்றைக் குறிப்பிடு கிறது. ஈண்டுக் கூறிய கோளபட்டினம், காவேரிப்பட் டினமே யாம்.

சோளுடு, செந்தமிழ் நாட்டினைச் சேர்ந்த பன்னிரு கிலங்களாகப் பண்டைக் காலத்தக் கருதப்பட்ட பன்னிரு நிலங்களில், புனல்நாடு, பன்றி நாடு, அருவாநாடு என்பவற் றைக் கொண்ட ஒரு பெருகாடாம். அஃது, இக்காலை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களையும், வட, தென்னுர்க்காடு மாவட்டங்களின் பகுதிகளையும் உள் ளடக்கிய கிலப்பகுதியாகும். சோனட்டெல்லை இஃது என அறிவிக்கும் பழைய வெண்பா ஒன்றும் உண்டு.

'கடல் கிழக்குத் தெற்குக் காைபுரள் வெள்ளாறு

குடதிசையில் கோட்டைக் கரையும்-வடதிசையில் எளுட்டு வெள்ளாற் றிருபத்து நாற்காதம் சோளுட்டிற் கெல்லை யெனச் சொல்.”

'சோழ வளநாடு சோறுடைத்து’

என்ற சிறப்பினை உடையது சோளுடு; அச்சிறப் பிற்குக் காரணமாய் இருப்பது, தன் போக்கின் பெரும் பகுதியைச் சோழநாட்டில் பெற்றிருக்கும் காவிரிப் ப்ேராறே; இதனல், சோளுடு, காவிரிநாடு', 'காவிரிசூழ் நாடு', 'காவிரி புரக்கும்நாடு” என்றெல்லாம் அழைக்கப் பெறுதலும் உண்டு. காவிரி வான்பொய்ப்பினும் தான்் பொய்யாப் பெருமலையைத் தன் பிறப்பிடமாக உடையது; அதனல், பெருவறன் ஆகிய பண்பில் காலையும், துரைத்த தலையுடன் எங்கும் பரந்து பாய்ந்து பொன்னேக் கொழிக்