பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5

கும் காவிரி வற்ருது பாய்வதால், அந்நாட்டு உழவர், ஏற்றம் முதலாயின கொண்டு நீர் இறைக்கவேண்டிய இன்றியமை யாமையும் இலராவர். காவிரியோடு, மற்றும் பல பேராறு கள் கலந்து பாய்ந்து, அங்காட்டை வளமாக்குவதால், 岛示 வளம் கிாம்பியது சோனடு என்ற கருத்தில், அந்நாட்டை ர்ேநாடு” எனவும், புனல்நாடு' எனவும் பெயரிட்டு அழைப்பர்.

தென்னுட்டு நெற்களஞ்சியம் சோளுடு,” என்ற சிறப்பின இன்று பெற்றிருப்பதேபோல், அன்றும் பெற் றிருந்தது அந்நாடு என்ற உண்மையை,

'சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடு” (பொருநர் : உசசு-ச :)

'ஒரு பிடி படியும் சீறிடம்

எழு களிறு புரக்கும் காடு” (புறம் : ச0)

என்ற பத்தப்பாட்டு, புறநானூற்று அடிகளான் உணர்க.

நீர்வளம் மிக்கமையால், சோனுட்டுக் கழனிகள் என்றும் விளைவரு விளைவு அருமையானும், வேலி ஆயிர மாக விளைவதாலும், விளக்க நெற்கூடுகள், மலைக்குன்று க3ளப்போல் அந் நாடெங்கும் காட்சி தரும்; செந்நெற் கதிர்களைத் தின்ற எருமைக் கன்றுகள், உண்ட இளைப்புத் தீர, அங்கெற் கூடுகளின் கிழலிலே துயில் கொள்ளும் ; சேற்றில் புரண்டும், உடற்றினவு நீங்கப்பெரு எருமைகள், அந் நெற்கூடுகளில் தம் உடலை உராய்வதால், கூடுகளின் புரிநெகிழ, உட்கிடக்கும் உணவுப் பொருள்கள் புறத்தே சொரியும் ; ஆலேயிலிட்டுப் பிழிந்தெடுத்த கருப்பஞ் சாற் றைப் பாகுஆக்கிக் கொள்வான்வேண்டி கொளுத்திய தீயால், அண்மையில் உள்ள கழனிகளில் மலர்ந்திருக்கும் நெய்தற் பூக்கள் வாடிக் கருகும். கடலைச் சார்ந்த சிற்றார் களைச் சூழஉள்ள கழிகளில் கடற்பொருளாய உப்பை உள்நாட்டிற்குக் கொண்டுசென்று விற்று, அதற்கு விலை