பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 சோழர்

குன் ; இப்படைத் துணைக்கொண்டு அவன் அழித்த பகை வர் நாடுகள் பலப்பல; பகைவர் நாட்டு வயல் விளைபொருள் களைக் கொள்ளையிட்டும், அவர் மனேயிடத்து மாங்களே அழித்து விறகாக எரித்தும், காவல் அமைந்த அவர் நாட் டுக் குடிநீர்க் குளங்களில் தன் களிறுகளைக் குளிப்பாட்டி யும், ஊரும் சேரியும் ஒருங்கு அழிய எரியூட்டியும், அப் படை ஆங்கு விளேத்த அழிவுகள் அம்மம்ம கொடிது! கொடிது செஞ்சுடர் ஞாயிற்றுச் செங்கிறம் போலும் செந்திச் சூழ்ந்து எழ, எரிந்து அழிவுற்ற அந் நாடுகளின், காணக் கண் கூசும் காட்சியைக் காட்டி, அவன் போற்ற லேப் பாராட்டியுள்ளார் பாண்டரங்கண்ணஞர் எனும் புல வர்ப் பெருந்தகையார்.

'முனைமுருங்கத் தலைச்சென்று, அவர்

விளைவயல் கவர்பு ஊட்டி,

மனைமரம் விறகாகக்

கடிதுறைகீர்க் களிறு படீஇ

எல்லுப் படவிட்ட சுடுதீ விளக்கம்

செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் முேன்றப்

புலங்கெட இறுக்கும் வரம்பில்தான்ே. (புறம் : கசு)

ஆற்றல்சால் அரசனுய் விளங்கிய இராசசூயம் வேட்ட

பெருநற்கிள்ளியொடு நட்புபூண்டு வாழ்தலே நலன் நல்குவ தாகும்; பகைத்துக்கோடல் பாழுறு செயலாம் எனும் பேரறிவு இழந்து, பெருகற்கிள்ளியொடு பகைகோடலை மேற்கொண்டிருந்தான்் மாந்தரஞ்சோல் இரும்பொறை எனும் சேர வேந்தன்; அவ்வாறு பகைத்தான்ேப் போரிட்டு வெற்றிகொண்ட நம் வேந்தன், வழி வழியாகச் சோழர்க் குத் துணைபுரியும் தேர்வண்மலையன் எனும் முள்ளூர் மன் னன், இப் போரிலும் தனக்குப் படைத்துணையளித்த அருஞ் செயலை அகம் மிக மகிழ்ந்து பாராட்டியுள்ளான் ; போற்றலும் பெரும் படையும் உடைய பெருவிறற்கிள்ளி, தேர்வண்மலையன் செய்த துணையைச் சிறிது எனக் கரு தாது, பெரிதென மதித்துப் பாராட்டும் பேருள்ளம் சம்ம ைேசாற் பாராட்டற்குரியதாமன்ருே மாந்தரஞ் சேரல்