பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈強 சோழர்

யுமே விழுமியவாதக்கருதி வாழ்ந்தமையினலேயே தமிழகம் தன் பெருமை குன்றுகிறது என்ற அறிவு வரப்பெற்ற வுடனே, பெருநற்கிள்ளி தன்னேயொத்த தமிழரசர்களாய சோ, பாண்டியரோடு பகைகோடல் ஒழித்தப் பழகிய கண்பனுய் வாழத் தொடங்கினன். நாட்டு மக்கள் நல் வாழ்வே நாடாள் அரசர்தம் கல்வாழ்வாம் என்ற அறிவு வரப்பெற்ற இராசசூயம் வேட்டோன், அக்காலே அந்நாடு களை ஆண்டிருந்த சோமான் மாரிவெண்கோவொடும், பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி யொடும் நட்புறவு பூண்டு கல்லோர் போற்ற வாழ்வான யிஞன். மூவேந்தரிடையே நிலவிய இவ்வொற்றுமை, நல்லி சைப்புலமை மெல்லியலாராய ஒளவையார் உள்ளத்தை உவகைப் பெருங்கடலுள் ஆழச்செய்தது. மூவேந்தர் உறவு, தமிழகத்தின் உயர்விற்கு உறுதுணைபுரியும் என்பதை உணர்ந்தவர் ஒளவையார், ஆகவே, அவ்வுறவு நீடித்து வாழ கினேந்தார்; புகழும் பொருளுமே பகைவளர்தற்குக் காரண மாம் என அறிந்த ஒளவையார், வேந்தர்தம் உள்ளத்தே, கிலேயாமை எண்ணம் கிலேபெறவழிசெய்து, அதன்வழியே புகழ்மாட்டும், பொருள்மாட்டும் தோன்றும் ஆசையையும் அவ்வாசை காரணமாக எழும் பற்ருமை உணர்வையும், அப்பற்ருமை காரணமாகத் தோன்றும் பகையுணர்ச்சி யையும், அப்பகை காரணமாக விளையும் நாடழிவினையும் தத்ெதுகிறுத்த கினேந்து, அவ்வேந்தரை அணுகி, "தமிழ்ப் பெருவேந்திர் ! நீங்கள் மூவிரும், துங்கள் பகைமறந்து உறவுடையாய் ஒன்று கலந்திருக்கும் இக்காட்சி, அந்தணர் வளர்க்கும் ஆகவனியம், காருகபத்தியம், தென்திசை யங்கி என்ற முத்தீயை கினேப்பூட்டுவதாய் உளது. முத் தீயில் ஒன்று குறையினும், அந்தணர் கடனுற்றல் இய லாது. அஃதேபோல், மூவருள் ஒருவர் பகைத்து நீங்கி லும் தமிழக வாழ்வு தழைக்காது; ஆகவே, விேர் மூவிரும் இன்றேபோல் ஒன்று கலந்து வாழ்வீராக! ஆளும் உலகம் உயர்ந்தோர்வாழ் தேவருலகொப்ப உயர்ந்ததே ஆயினும், இறந்துபோவுழி உடன்வருதல் இல்லை; அன்றியும் வாழ் காள் உள்ளவரையிலாவது, அந்நாடு தம் ஆட்சியின் கீழ்