பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

வேனிற் காலத்தில் வேண்டுமளவு தென்றல் நுழை தற்காம் சாலேகங்கள் அமைந்த வேனிற் பள்ளிகளில் வாழ்ந்தும், குளிர்காலத்தில் வாடை நுழையாவாறு அமைந்த வாயில்களைக்கொண்ட கூதிர்ப்பள்ளிகளில் குடி யிருந்தும், தட்ப வெப்பக் காலநிலைகளுக்கேற்ப தங்கள் வாழ்விடங்களே மாற்றி அமைத்து வாழும் வகையறிந்தவ. ராய தமிழர், தாங்கள் முதுமையுற்ற காலத்தே இருந்து ஒய்வுபெற்று வாழ்தற்காம் இனிய இடங்களைத் தேர்ந்து வாழும் வகையினையும் அறிந்திருந்தனர். அவ்வாறு வாழ்ந்த இடங்களுள் இலவந்திகைப்பள்ளி என்பதும் ஒன்று; இல வந்திகைப்பள்ளியாவது வேண்டுமளவு நீரை நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறிகள் அமைந்த வாவியை நடுவி டத்தே பெற்று நறுமணம் நாறும் பல்வேறு மலர்நிறை மாங்களால் கிறைந்து மாண்புற்ற மலர்ச் சோலையாம். அஃது அரசர் தம் மனேவியமொடிருந்து மகிழ்ந்துறையும் இடமாதலின், ஏனேயோர் அணுகற்கு இயலா அரிய காவ லையும் உடையது; அரசர்கள் இத்தகைய இலவந்திகைப் பள்ளிகளில் இருந் த வாழுங்காலம், ஆண்டு நிறைந்த முது மைக்காலமே யாகலின், அவர்தம் வாழ்நாள் பெரும்பாலும் ஆண்டே முடிந்துபோதலும் உண்டு. நலங்கிள்ளி சேட் சென்னியும் அத்தகைய இலவந்திகைப்பள்ளி யொன்றில் இறந்துபோனமையால், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என அழைக்கப்பெற்றுளான்.

இவன், நலங்கிள்ளி சேட்சென்னி' என அழைக்கப் பெறுதலாலும், நலங்கிள்ளி என்பான், சேட்சென்னி நலங்கிள்ளி' என அழைக்கப்பெறுதலாலும், இவன் சேட் சென்னி என்பானின் பெயரனும், நலங்கிள்ளி என்பானின் மகனும் ஆவன் எனக்கொள்க. சேட்சென்னி நலங்கிள் ளியை இவன் மகனுகக்கொள்வதும் பொருந்தும்,