பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந. உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

சங்க நூல்களால் அறியப் பெற்ற சோழ அரசர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவோன், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியே என்று கூறின், அது பொருந்தும் , உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, கரிகாற் பெருவளத்தான்ப் பெற்றுப் புகழ்கொண்டோ வைன் ; இது, ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார், பொருக ாாற்றுப் படைக்கண், கரிகாலனை, உருவப்பஃறேர் இளை யோன் சிறுவன் ' எனப் பெயரிட்டு அழைப்பதால் தெளி வாகும்; இளஞ்சேட் சென்னியின் மனேவி, அழுந்துாரில் வாழ்ந்த வேளிர்குடியில் பிறந்த பெருமாட்டியாராவர்; இது, மன்னர் பாங்கிற் பின்ன ராகுப' என்ற கொல்காப் பியம் அகத்திணையியல் சூத்திர உரையில் (சூ கூ0.) உரு வப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, அழுந்துார் வேளிடை மகட் கோடலும், அவன் மகன் கரிகாற் பெருவளத்தான்் நாங்கூர் வேளிடை மகட் கோடலும்” என்று நச்சினர்க் கினியர் கூறுவதால் உறுதியாகும்; கரிகாற் பெருவளத் தான்் கங்கை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என் பதை, அவ்வுரையின் பிற்பகுதியும் உறுதிசெய்தல் காண்க. இளஞ்சேட் சென்னியின் மகன் கரிகாலன், வெண்ணிப் பறந்தலையில் பெற்ற கன்னிப்போர் வெற்றி குறித்து, அழுந்துாரில் விழாக் கொண்டாடப் பெற்றது என்று கூறும் பரணர் பாட்டால், அழுந்துார் வேள் மகளே, இளஞ் சேட் சென்னியின் மனைவியாவள் என்ற உண்மை மேலும் உறுதி செய்யப் பெறும் ; கரிகாலன் பிறப்பதற்கு முன் னரே அரச உரிமையைப் பெற்றுவிட்டான் எனக்கூறும், * தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி” என்ற பொருநராற் மறுப்படைத் தொடரால், கரிகாலன் பிறப்பதற்கு முன் னரே, இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டான் என்ற செய்தி புலனுதல் காண்க.

இளஞ்சேட் சென்னி, அழகிய பல தேர்களைக்கொண் டிருந்தான்் என்பதை அவன் பெயரைக் கொண்டே அறிய