பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சோழர்

லாம் ; இஃது உண்மையாம் என்பதை, உருவப்பஃறேர் இளையோன் சிறுவன் ’ என்ற பொருநராற்றுப் படைத் தொடரும், இவனைப் பாாட்டும் பாணர், ' கடலிடைத் தோன்றும் ஞாயிறேபோல், பொற்றேர்மீது பொலிவுறத் தோன்றுகின்றனே ’ எனப் பாராட்டினர் எனக் கூறும் புற நானூற்றுத் தொடரும் உறுதி செய்தல் காண்க.

உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, கலமெலாம் பெற்ற நால்வகைப் படையுடையனுவன் ; அவன் படைப் பெருமை கண்டு பாராட்டும் பரணர் பாட்டு, அவன் ஆற்றற் சிறப்பை உள்ளவாறு உணர்த்துவதாம்.

' அவன் வீரர் ஏந்திய வாள்கள், பகைவர் உடலைப் பிளந்து, குருதிக்கறை பெற்ற ச், செவ்வானம்போல் சிவந்த தோன்றும்; வீரர்கள், களம் முழுதும் ஒடிப் போரிடுவதால், அவர் காலிற் கட்டிய வீரக் கழல்கள், சித் திர வேலைப்பாடு சிதைந்து, கொல்லும் ஆனேற்றின் கூரிய கொம்புகள்போல் தோன்றும் ; கையிற் பிடித்த கேடயங் களில், பகைவர்விட்ட அம்புகள் பட்டுத் தோன்றிய துளை கள், இடம் பெயராத எழுதிவைத்த இலக்குகள்போல் இலங்கித் தோன் றும் ; குதிரை வீரர்கள், பகைவரைப் பாய்ந்து பாய்ந்து தாக்க, வலமும், இடமும் மாறிமாறித் திருப்புவதால், கடிவாளத்தால் தாக்குண்டு இரத்தம் கசியும் வாயுடையவாய் சிற்கும் குதிரைகள், மான் முதலியவற்றைக் கடித்து உண்டு, இரத்தக்கறை படிய கிற்கும் புலி போலத் தோன்றும் , யானேகள், பகைவர்தம் கோட்டை வாயிற் கதவுகளை முறித்து அழித்து, நுனி சிதைந்த கோடுடைய வாய் வெகுண்டு திரிந்து, உயிர் உண்னும் எமனைப்போல் தோன்றும்; இளஞ்சேட் சென்னி, கருங்கடல் மீது எழும் செஞ்ஞாயிறே போல், பொற்றேர்மீது பொலிவுறத் தோன் அறுவன் ; இளஞ்சேட் சென்னியும், அவன் படையும் இத் தகையன் ஆதலைக்கண்,ே அவன் பகைவர், தாயற்ற குழந்தை, தான்் உண்னும் உணவைப் பெறமாட்டாமை பால், ஒயாத அழுவதைப் போல், அாற்றலும், அழுகையும் உடையாாவர்.” பாணர் பாட்டின் பொருளுரை இது.