பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி 23.

கொண்டான் என்று கூறப்படுவதால், கரிகாலனும், அப் பாழியோடு, யாதேனும் தொடர்புடையணுதல் வேண்டும் என்று கருத இடமுண்டு ஆதலாலும், அவன் தந்தை யெனக் கூறப்பெறும் உருவப்ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி சேரமான் பாமுளுர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப் பாழி எறிந்த இள்ளுசேட்சென்னி, இளம்பெருஞ் சென்னி என்ற நால்வரும் வேறு வேறு அல்லர் ; ஒருவரே எனக் கொள்ளுதல் நேரிதாம்.

பெருவீரனுய் விளங்கிய உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, தன் பால் வரும் இரவலரைப் பேணிப் புரத்தலி அம் வல்லவனவன் எனக் கூறுவர் புலவர் பெருங்குன்அள் கிழார்.