பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. கரிகாற் பெருவளத்தான்்

கரிகாற் பெருவளத்தான்் இளமைக் காலத்தே, அவனே அழிக்கக் கருதிய அவன் தாயத்தார், அவனேச் சிறைக்கோட்டத்து இட்டதொடு அமையாது, சிறைச் சாலையைச் சூழத் தீயையும் வைத்தனர்; கரிகாலன், சிறைக் கோட்ட மதிலைத்தாண்டி வெளிவர முயன்ற காலையில், அவன் கால்கள், அத்தீயால் கரித்து போயின ; கால் கரிந்து போயினமையின், அவன், கரிகால் என்றே அழைக் கப் பெறுவானுயினன் ; இதனுல், அவன் இயற்பெயர் அறிய இயலாமற் போயிற்று.

'முச்சக் காமும் அளப்பதற்கு நீட்டியகால்

இச்சக் காமே அளந்ததால் -செய்ச்செய் அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல் நீர்நாடன் கரிகாலன் கால் நெருப் புற்று.”

(பொருகாற்றுப்படை : ஈற்று வெண்பா) “சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகன்.”

(பழமொழி: க0இ) - பழந்தமிழ் இலக்கியங்களுள், இவன் பெயர், “ஆன்” விகுதி பெருமல், கரிகால் ” என்றே வழங்கப்பெற்று ளது : “ காய்சின மொய்ம்பிற் பெரும் பெயர்க் கரிகால்”, பெருவளக் கரிகால்”, கலிகொள் சுற்றமொடு கரிகால் காண (அகம். உசசு, கஉடு, கூஎசு.) சிற்சில இடங்களில், அவன், தன் நாட்டை வளம் படுத்திய சிறப்பால் அவ லுக்கு அளிக்கப்பெற்ற வளவன்' என்ற பெயர் தொடர, * கரிகால் வளவன் ' என்றும் வந்துளது : களியியல் யானேக் கரிகால் வளவ! (புறம் : சுசு), கரிகால் வள வன்” (பொருநராற்றுப்படை கச.அ.) அவன் கால் கரிந்து போன கிகழ்ச்சியினும், அவன் சோணுட்டை வளமாக்கிய செயலே பெரிதும் பாராட்டப் பெற்றமையான், அவன் பெயர், கரிகால்” என்பது தொடாப் பெருமல், வள வன் ’ எனத் தனித்தே வழங்கப்பெறலாயிற்று : “ இயல்