பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 27.

தேர் வளவ!’ (புறம் : எ.) நாட்டை, கிலத்தான்ும், நீரா லும் வளமாக்கியதோடு, வாணிபத்தை வளர்த்துத் தன் நாட்டுச் செல்வத்தையும் செழிக்கச் செய்தான்். ஆகவே, அவன் திருமாவளவன் ' என்றும் அழைக்கப்பெற்ற ளான் : “ அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமா வளவன் (பட்டினப்பாலை : உக அ - சு.)

கரிகாலன் என்ற பெயர், கால் நெருப்புற்றமையால் உண்டான காணப் பெயர் என்பதை அறிவிக்கும் சான்று பல இருப்பதையும் நோக்காது, அவன் பெயர், அன் விகுதி பெருமல், கரிகால்” என்றே பழந்தமிழ் இலக்கியங் களில் வழங்குவதையும் மதியாது, அவன் பெயரைக் “கரி காலன்” என்றே கொண்டு, அதை வடமொழித் தொடர் புடையதாக ஆக்கி, கரி-காலன் என்று பிரித்து, அவன் யானைகளுக்குக் காலன் என்றும், கரிகாலன் என்பதைக் * கலிகாலன் ” என மாற்றி, அவன் கலிப்பகைக்குக் காலன் என்றும் பொருள் கொண்டு மயங்குவாரும் உளர்.

அழுந்துார் வேளிர் தலைவன் மகளும், உருவப்பஃறேர் இளஞ்ச்ேட் சென்னியும், கரிகாற் பெருவளத்தான்ின் தாயும் தந்தையுமாவர் ; இது, உருவப்பஃறேர் இளே யோன் சிறுவன்’ (பொருநராற்றுப்படை : காட0) என்ற தொடராலும், மன்னர் பாங்கிற் பின்ன ராகுப” என்ற தொல்காப்பியத்திற்கு (அகத் : கு: கட0.) உருவப்பஃ. றேர் இளஞ்சேட் சென்னி, அழுந்துார் வேளிடை மகட் கோடலும், அவன் மகன் கரிகாற் பெருவளத்தான்் நாங்கூர் வேளிடை மகட் கோடலும் ' என எழுதும் ஈச்சினர்க்கினியர் உரையானும், கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் பெற்ற வெற்றி குறித்து அழுந்துாரில் விழாக் காண்டாடப் பெற்றது எனக் கூறும் பரணர் பாட்டா அம் (அகம் : உசி.சு.) உறுதியாதல் காண்க.

கரிகாலன் மனைவியார் காங்கூர் வேளிர்குலச் செல்வி யாராவர்; இச் செய்தியும் முன்னர்க் காட்டிய நச்சினர்க்

கினியர் உரையினலேயே விளங்குகிறது ; கரிகாலன் இறந்த