பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சோழர்

பின்னர், அவன் பிரிவாற்ருது வருந்தும் கருங்குளவாத ஞர் என்ற புலவர், துகளிர் மகளிரொடு வேத வேள்வித் தொழில் முடித்தான்்” எனவும், 'மகளிரும் இழை களைந் தனர்” (புறம் : உங்-ச.) எனவும் மகளிர் எனப் பன்மை வாய்பாட்டான் கூறுவதால், நாங்கூர் வேள் மகளே அன்றி, வேறு பல மகளிரும் கரிகாலன் மனேவியாாய் இருந்தனர் என்று எண்ண வேண்டியுளது. பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனுரும் கரிகாலன் மனைவியர் பலராவர் என்ற கருத்துடையவரே.

'பொன் தொடிப் புதல்வர் ஒடி ஆடவும்' (உகூடு) என்ற பட்டினப்பாலைத் தொடரால் கரிகாலனுக்கு மக்கள் பலர் இருந்தனர் என்பது புலப்படுகிறது. ஆயினும், அம் மக்கள் யாவர் என்பது இனிது விளங்கவில்லை.

'கரிகாலன் காலத்தில் ஒராட்சிக்கு உட்பட்டதாக இருந்த சோளுடு, அவனுக்குப் பின் இருபகுதிப் பட்ட தென்றும், அதனில் உறையூர், மனக்கிள்ளிக்கும், புகார், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் தலைநகரங்க ளாய் இருந்தன என்றும் தெரிய வருவதால் அக்கிள்ளி கள் இருவரையும் கரிகாலன் மக்களாகக் கருதுவதற்கு இடமுண்டு; இவ்வாருயின், மேற்கூறிய செங்குட்டுவனுக்கு மாமனை உறையூர் நெடுங்கிள்ளியும், புகார்க் கிள்ளிவள வன், நலங்கிள்ளிகளும் கரிகாலன் மகார் வயிற்றுப் பேரர் கள் ஆதல் வேண்டும் ” என்று கூறுகிருர் திருவாளர் மு. இராகவையங்காரவர்கள்.

  • சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் சன்ற மைந்தன்” (சிலம் பு: உகூ. உரைப் பாட்டு மடை), சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்று ஏழ்பரி நெடுந் தேர்ச் சோழன் தன் மகள் நற்சோனை ஈன்ற மக் கள் ' (சிலம்பு : பதிகம்: அடியார்க்குகல்லார் உரை), சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் " (பதிற்றுப்பத்து: பதிகம் : டு.) என்ற தொடர்களால், செங் குட்டுவன் தாய் சோழன் மகளாவள்; அவள் பெயர் நற்