பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哥0 சோழர்

தெரிதலாலும் (புறம் கூஉ). கிள்ளிவளவனும், கலங்கிள்ளி யும் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியின் மக்களாவர் என்பதையும், ஒருவாறு ஒப்புக்கொள்ளுதல் கூடும் ஆயினும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, கரிகாலன் மகன் என்பதைக் காட்டுதற்குரிய சான்று ஒன்றும் கிடைத்தின் ; ஆகவே, மணக்கிள்ளியும் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளியும் கரிகாலன் மக்கள் என்றும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும், கிள்ளி வளவனும், கலங்கிள்ளியும் கசிகாலன் மகார் வயிற்றுப் பேரர்கள் என்றும், இமாசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி, நெடுங் கிள்ளியின் மகன் என்றும் கூறுவது பொருத்தாமை

அறிக.

காவிரி யாற்றில், கழார்ப் பெருந்துறையின் கண் விழாக் காலத்தில், கரிகாற் பெருவளத்தான்் கண்டிருப்ப, ஆட்டனத்தி என்ற ஆடுதல் தொழிலில் தேர்ந்த பொருநன் ருவன், காலில் கழல் புரள, அரையில் கட்டிய கச்சை யின்மேல், பொன்னுற் செய்த பாண்டில் மணிகள் ஒலிப்ப, அழகுபெற ஆடிக்கொண்டிருந்தான்் ; அப்பொழுது, அவன் வெள்ளத்தால் ஈர்க்கப்பட்டு, அதன் வழியே சென்று கடலிற் சேர்ந்தான்் ; வெள்ளி வீதியாராலும் போற்றப்படும் புலமை வாய்ந்த அவன் மனேவி ஆதிமந்தி யார், கணவன் புனலால் இழுக்கப்பட்டதை அறிச்து, பல ஊர்களிலும், பல நாடுகளிலும் சென்று கேடியும் காணு ளாய்க் கவன்று அலைந்தாள் ; அப்போழ்து மருதி என்ப வள் கடல்வாய்ப் பட்டிருந்த ஆட்டனத்தியை அவளுக்குக் காட்டிக் கடலுள் புகுந்துவிட்டாள் என்ற வாலாறு பரணர் பாக்களாலும், பிற பாக்களாலும் அறியப்படு கிறது; ஆதிமந்தியார் கரிகாலன் மகள் என்றும், ஆட்ட னத்தி சேரவேந்தன் என்றும், இவள் அவன் மனைவியென் ஆறும் முறை வகுத்துக் கூறுகிருர் இளங்கோ வடிகளார் :

'மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன்

தன்னைப் புனல் கொள்ளத் தான்் புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ! என்னக் கடல்வந்து