பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 35

நகத்தினேயும், வளைந்த வரிகளையும் உடைய புலிக்குட்டி, கூட்டுள் வளர்ந்தாங்குப் பகைவர் சிறையகத்தே வாழ்ந்த கரிகாலனும், ஆண்மையும் உரனும்பெற்று வளர்ந்து, மேல் செய்யக்கடவ செயல்களே, நுண்ணிதாக எண்ணித்துணிந்து பெரிய யானே ஒன்று, தன்னைப் பிடிப்பார் வீழ்த்திய பெரிய குழியினின்றும் ஏறுதற்கு அக்குழியின் கரைகளைத் தன் கூரிய கோடுகளால் குத்திக் குழியைத் துர்த்து ஏறித் தன் பிடிமுதலாம் தன் இனத்தோடு சேர்ந்தாற்போல, பகைவ ருடைய திண்ணிய காவலைத் தன் வாள் துணையால்

ன் ' எனக் கூறுவர் அவர்.

அழித்து வெளியேறினுன்

' கூருகிர்க்

கொடுவரிக் குருளே கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர் பிணியகத் திருந்து, பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு துண்ணிதின் உணர நாடி, நண்னர் செறிவுடைத் திண்காப்பு ஏறி, வாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தி.”

(பட்டினப்பாலே உஉ0-எ)

கரிகாலன் விடுதலைக்குப் பெருந்துணே புரிந்தவர் இரும்பிடர்த்தலையார் என்றும், அவர் கரிகாலனுக்கு அம். மான் முறையினராவர் என்றும், அவரே கருங்கை யொள் வாட் பெரும்பெயர் வழுதியைப் பாராட்டிய புலவராவர் என்றும் கீழ்வரும் பழமொழிச் செய்யுளேச் சான்முகக் கொண்டு கூறுவாரும் உளர்:

“சுடப்பட்டு உயிர்.உய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் போானைப் பெற்றுக்-கடைக்கால் செயிாறு செங்கோல் செலீஇனன்; இல்லை உயிர்உடையார் எய்தா வினை.” (பழமொழி)

உள்நாட்டில் தாயத்தார் விளைத்த குழப்பத்தையும், பகையையும் போக்கித் தனக்குரிய தாயத்தை முறைப்படி எய்திய கரிகாலன், வேறு பகைகளையும் வோறுக்க