பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சோழர்

வேண்டியிருந்தது. உருவப்பஃறேர் இளையோன் இறந்தது, சோளுட்டில் தாயத்தார் விளேத்த உள்நாட்டுக் குழப்பம், கரிகாலன் ஆண்டிளமை ஆக இவை, பகை மன்னர்க்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பாகத் தோன்றவே, சோனும், பாண்டியனும், பிறரும் ஒன்று சேர்ந்து, அவனே அழித்து, சோணுட்டாசைக் கைப்பற்றத் திட்டமிட்டனர். சோமான் பெருஞ்சேரலாதன், பாண்டியன் ஒருவன், வேளிர் பதி னுெருவர் ஒன்று கூடி, நீடாமங்கலத்திற்கு அண்மையில் கோயில்வெண்ணி என வழங்கும் வெண்ணிவாயில் என்னு மிடத்தில் கரிகாலனே எதிர்த்தனர்.

தன்னே எதிர்த்த அத்தனே அரசர்களையும் கரிகாலன் தான்் ஒருவனுகவே கின்று அழித்தொழித்தான்். வெண்ணிப்போர் வெற்றி கரிகாலனுக்குப் புலவர் பல்லோர் பாராட்டைத் தேடித்தந்தது. போரில் பதினெரு வேளி ரொடு இருபெரு வேந்தரும் பட்டனர் எனப் பாணரும், இருபெரு வேந்தரும் ஒருகளத்தே அவிந்தனர் என முடத் தாமக்கண்ணியாரும், வெண்ணிப் பறந்தலையில் புறப் புண்பெற்ற சோலாதன் வடக்கிருந்து உயிர்துறந்தான்ுக, அதுகேட்ட சான்ருேர் பலர் தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தனர் என மாமூலனரும், உவாநாளன்று, ஒரே காலத்தில் மாறுபட்ட திசைகளில் ஞாயிறும் கிங்களும் காணப்படினும், அவற்றுள் ஒன்று சிறிது கால எல்லேக்குள் மறைந்துவிடுவதைப்போல், கரிகாலன் களத்தே தான்் பெற்ற புறப்புண் நாணிச் சேரலாதன் வடக்கிருந்து உயிர் விட்டான் எனக் கழாத்தலை யாரும், வென்ற கரிகாலனி லும், வடக்கிருத்த சேரலாதன் கல்லன் என வெண்ணிக் குயத்தியாரும் கூறிப் பாராட்டி யுள்ளனர். வெண்ணிப் போர், கரிகாலன் கன்னிப்போர்; ஆயினும், அதுவே அவன் பெற்ற வெற்றிகளுள் பெரு வெற்றியாகும்.

இப்போரின் விளைவாய்த் தமிழ்நாட்டில் உள்ள கரிகாற். பெருவளத்தான்் பகைவர் அனேவரும் பலம் குன்றுவாா யினர். வெண்ணியில் பெற்ற இவ் வெற்றி குறித்துக் கரிகாலன் தாய்பிறந்த அழுந்தாரில் வெற்றி விழாக்