பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சோழர்

சொல்லான் முறைசெய்தான்் சோழன் , குலவிச்சை கல்லாமற் பாகம் படும்.’

என்ற பழமொழி வெண்பாவும் அதன் உரையுமேயாகும்.

'முதியோர் அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்,' என்ற அப் பொருநராற்றுப் படைத் தொடர்க் குக், கரிகாலன் கரை முடித்து முறைசெய்த வரலாற்றைக் குறிப்பதாகப் பொருள் கூறுவர் நச்சினர்க்கினியர்; அத் தொடர், சோணுட்டு வளங்களை விரித்துரைக்கும் பகுதி யில், இளையோர் வண்டல் அயரவும்,' என அந் நாட்டுச் சிறுவர் தொழிலாகிய ஆடலைக் குறித்துப் பின்னர் முதி யோர் செயலைக் குறிக்க வந்துளது. இளையோர் தம்முள் பகையின்றிக் கலந்து வண்டலாடி விளையாடுகின்றனர்; அந் நாட்டு முதியவர்களும், முன்னே பகைமைகொண்டு இருந்தாலும், அப் பகை உணர்ச்சியை இறுதிவரை காண்டு நிற்பாரல்லர் , அறங்கூரவையுள், தம் வழக் கினே உரைக்கப் புகுமுன்னரே, பகையொழித்து ஒன்று படுவர் ; எனவே, அந் நாட்டு மக்கள், இளையராயினும், முதியாயினும் தம்முள் மாறுபட்டு வாழாமல், ஒன்று கலந்தே வாழ்கின்றனர் என, அத் தொடர்கள் எல்லாம், அங் நாட்டு மக்கள் தம் பண்பாட்டைக் குறிப்பதாகத் தோன்றுகிறதே ஒழிய, கரிகாலன் முறை செய்யும் முறை யினே விளக்க வந்ததாகத் தோன்றவில்லை. பாட்டைத் தமக்கு வேண்டியவாறு பிரித்தும், கொண்டு கூட்டியும், தம் மனத்தில் நிறைந்துள்ள கருத்துக்களையும், கதைகளே யும் ஏற்றிப் பொருள் காணல், நச்சிஞர்க்கினியர்பால் காண லாம் முறையாகும் என்பதற்கு இதையும் ஒரு சான்ருகக் கொள்வதல்லது, அவர் பொருளை உண்மைப்பொருள் எனக் கொள்வதற்கில்லை.

மணிமேகலை, பழமொழிச் சான்றுகளைக் கொண்டு இவ் வரலாற்றை உண்மையென ஒப்புக் கொள்வதாயின், அக் காட்டு மக்கள், தங்கள் அரசன் யாவன் என்பதையும் உணராதவராவர் என்ற பழியையும், அறியாமையையும்

சோனுட்டு மக்கட்குச் சூட்டுவதோடு, காட்சிக்கு அரியன்