பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 47

கரிகாலன் என்ற பழியைக் கரிகாலனுக்கும் அளித்தவ சாவோம்; கரிகாலன் பிறப்பதற்கு முன்னரே, அவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்துவிட் டான் என்பதும், அவன் தாயத்தார், கரிகாலன் இளமைக் காலத்தே அவனேக் கைப்பற்றிச் சிறை செய்தனர் என்ப தும், அவன், கன் வாள் துணை கொண்டு சிறையினின் றும் மீண்டு சன் அரச உரிமையைப் பெற்ருன் என்பதும் நாட்டுமக்கள் அனேவாலும் அறியப்பட்ட நிகழ்ச்சிக ளாதல் வேண்டும்; அவ்வாருகவும், அந்நாட்டு மக்களுள் சிலர், அதிலும் முதியோர், கங்கள் அரசன் யாவன் அவன் இளையோன, முதியோனு என்றும் அறியாராயினர் எனக் கூறல் அந்நாட்டு கிலைமையை நன்கு அறியாதார் கூறிய அறியாமையேயாம்.

கரிகாலனுக்குக் காலத்தால் அண்மையில் வாழ்ந்த சாத்தனுரே அந் நிகழ்ச்சியைக் கூறுகின்ருரே என்றால், "இளமை நாணி, முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன்,' என்ற மணிமேகலைத் தொடர், கரிகாலனேயே குறிக்கிறது என்று கொள்வதற்குரிய அகச்சான்று எதுவும் அதில் இல்லை என்பதை உற்று நோக்குதல் வேண்டும்; பழமொழிச் செய்யுள் மூலமும், சோழன்,” எனப் பொதுவகையான் கூறியுளதே ஒழிய, கரிகாலன் பெயர் கூறிற்றில்லை என்பதையும் நோக்கினுல், மணிமேகலை யும், பழமொழியும் கூறும் நீதிவழங்கிய நிகழ்ச்சி, சோழர் குலத்தில் தோன்றிய ஒருவனேக் குறிக்கிறது என்று கொள்வதல்லது, அது, கரிகாலனையே குறிக்கிறது எனக் கொள்வதற்கில்லை.

கரிகாற் பெருவளத்தான்், தன் நாட்டுவளத்தைப் பெருக்கச் செய்த அருஞ்செயல்கள் பலப்பல ; காட்டின்' விளைபொருள் பெருக வழிசெய்தான்் முதற்கண் ; நாடு களைச் சூழ இருந்த காடுகளை அழித்து, அவற்றை வள மிக்க விலங்களாக மாற்றின்ை ; அக் கிலம் நீர்வளம் உடையதாகக், குளம் பல தோண்டினன் , அந்நீர் வளமும் போதாது என உணர்ந்த அர்கிலேயே, பயனின்றிக்