பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாற் பெருவளத்தான்் 49

மனைவி, மக்களோடு மகிழ்ந்து வாழ்வதிலும் தவறின. னல்லன் வாய்ப்புக் கிடைக்குந்தோறும், சுற்றம் சூழச் சென்று, காவிரியில் கழார்ப் பெருந்துறைக்கண் கடை பெறும் புதுப்புனலாட்டு விழாவில் கலந்துகொண்டு மகிழ் வதும் செய்வன்.

கரிகாலன், புலவர்களைப் பேணிப் புகழ் பெருக்கு வதிலும் பெருவிருப்புடையனவன்; அவன் வாயில், 'நசையுநர்க் கடையா நன்பெரு வாயில், எனப் புலவர் புகழ்வர் : பாணர், கருங்குள வாதனுர், வெண்ணிக் குயத் தியார், மாமூலனுர், முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங் கண்ணனர் முதலாய புலவர் பெருமக்கள் அவனைப் பாராட்டியுள்ளனர்; அவன் புலவர்களைக் கேளிர் போல நோக்கி, வேட்பக்கூறி அழைத்து, கண்ணிற்கான கண்ணுவழி யிருத்தி, அவர்க்கு வேண்டும் உணவும் உடை யும் உறுபொருளும் பலப்பல தங்து அனுப்புவன் ; அவன் தன்சீனப் பாராட்டிப் பாலே பாடிய புலவர் கடியலூர் உருத் திரங் கண்ணனர்க்குப் பதினறு துருயிரம் பொன் பரிசளித்தான்் என்றால், அவன் தமிழ்ப் பற்றினே என் னெனக் கூறிப் போற்றுவது !

'தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்

பத்தோ டாறு நூறு ஆயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலே கொண்டதும்.”

(கலிங்கத்துப்பாணி)

பெருஞ்சேரலாதனத் தோற்கடித்த கரிகாலன் முற்பட்டவன்; இமயம்வரை சென்ற கரிகாலன் பிற் பட்டவன்; சங்கநூல்களில் கரிகாலன் என இருவர் கூறப் பட்டுள்ளனர்: முதற் கரிகாலனேப் பற்றிய அகப்புறப் பாடல் களின் தடைக்கும், இரண்டாம் கரிகாலனைப் பற்றிய பட் டினப்பாலை, பொருநராற்றுப் படை இவற்றின் நடைக்கும் இடையில் சிலவும் சிறிதளவு வேறுபாடு துணுகி நோக்கு வார்க்குப் புலனும்” எனக் கூறுவாரும் உளர்;

4 س-.rعه G