பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§2 சோழர்

ளெது; பரணர், கரிகாலனைப் பாடி ஞர் என்றால், அவன் காலத்தில் வாழ்ந்தவர் என்று கொள்ளவேண்டுவதின் று. கரிகாலனுக்குப் பிற்காலத்தே வாழ்ந்த அவர் இறக்க கால நிகழ்ச்சிகளையே பாடினர் என்று கொள்ளுதல்வேண்டும் என்றால், பரணர் இரண்டாம் கரிகாலன் தந்தை எனக் கூறப்பெற்ற உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியை எதிர்முகப்படுத்தியே பாடியுள்ளமையானும், இக் கரிகால லுக்குப் பிற்பட்டோனகிய செங்குட்டுவனேயும் பாடியுள் ளமையானும், அவர் முதற் கரிகால்ன் காலத்தில் வாழ்ந் தவரல்லர் என்பதை ஒப்புக்கொள்வதான்லும், இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவரே என்பது உறுதிசெய் யப்படும்; ஆகவே, அவர் அகப்பாடல்களில் குறிப்பிடும், வெண்ணி, வாகை நிகழ்ச்சிகளுக்கு உரியோன் எனக் கூறப் பெற்ற கரிகாலன், அவர் காலத்தில் வாழ்ந்தோளுகிய இரண்டாம் கரிகாலன் அல்லன்; அவருக்கும், அவ்விரண் டாம் கரிகாலனுக்கும் முற்பட்டோனகிய முதற் கரிகா லனே என்று கூறுவது பொருந்தாது; வெண்ணிப் போர் வெற்றி குறித்து, அழுந்தாரில் ஆர்ப்பு எழுந்தது எனப் பரணர் கூறுவதால், பரணரால் குறிப்பிடப் பெற்முேன், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்கும், அழுந்துார் வேள் மகளுக்கும் பிறந்த கரிகாலனே என்பது தெளிவாகிறது.

பொருநராற்றுப் படைபெற்ற கரிகாலனும், உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகனே எனக் கூறுகிறது அப்பாட்டு; இதல்ை, அகப்புறப் பாடல்களில் பாராட்டப் பெற்ற கரிகாலனப் பெற்ருேரும், பட்டினப்பாலே, பொரு நராற்றுப் படைகளால் பாராட்டப்பெற்ற கரிகாலனைப் பெற்ருேரும் ஒருவரே என்பது நன்கு தெளிவாகிறது. பரணர், முதற் கரிகாலன்மீது ஏற்றிக் கூறும் அதே வெண் னிப் போர், முடத்தாமக் கண்ணியாரால் பாராட்டப் பெற்ற இரண்டாம் கரிகாலனுக்கும் ஏற்றிக் கூறப்பட் டுளது; அது, முன்னேர் செயலைப் பின்னுள்ளோர்க்கு. ஏற்றிக் கூறும் முறைபோலன்றி, அப்பாட்டுடைத் தலைவன் செயலாகவே கூறப்பட்டுளது; ஆகவே, அச்செயல், இரண்