பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்

திருமாவளவன் எனும் பெயர் கரிகாற் பெருவளத்தா, லுக்கே உரித்து ஆதலின், இவ்வரசன், அவனின் வேறு அறிதற்குக் குராப்பள்ளித் துஞ்சிய பெருங் கிருமாவளவன் என அழைக்கப் பெற்றுளான். இவ்வேந்தன், குராப்பள்ளி என்னும் இடத்தே உயிர் திறந்தவனவன். உறையூரிலிருந்து ஊராண்டவனுவன். பெருந் திருமாவளவன், நாட்டு மக்கள் பகைவராலும், பிறராலும் துன்புருமல் வாழ நாடாள்வதே நல்லாசின் இயல்பாம் என அறிந்து, அம் மக்களுக்குப் போர் முதலாம் செயற்கை நிகழ்ச்சிகளாலோ, மழை யின்மை முதலாம் இயற்கையின் விளைவுகளாலோ கேடு வங் துற்றவிடத்து, ' இக் கேடுகளை எவ்வாறு போக்கிக் காப் பேன் ' எனக் கலங்காது கின்று, நெடிது எண்ணி, கொடிது கடியுங் கோல்வன்மையுடையனவன் ; அதற் கேற்ற அறிவும் ஆற்றலும் அமைவரப் பெற்றவனவன். கடலைச் சார்ந்த கழிநீர் கொண்டு உப்பை விளைத்து, அவ் வுப்பினேக் கல்கிறை நிலமாம் குறிஞ்சி முதலாம் உள்நாடு களுக்குச் கொண்டு சென்று விற்கும் உமணர், அவ்வுப்பினே நிறைய ஏற்றிய வண்டி, இடையில் பெருமணல் வெளியிலும், நிறைசேற்று கிலத்திலும் சிக்கியவிடத்து, அதைப் பொருட் படுத்தாது, மண்டியிட்டு இழுத்துச் சென்று, வண்டியை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்கும் வலிய எருதுகளைப் போன்றவன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா

வளவன்.

திருமாவளவன் இருந்து ஆளும் உறையூரில் வாழ்ந்த மருத்துவன் காமோ கானர் எனும் புலவர், தங்கள் அரசன் பால் காணலாம் இவ்வரும் பண்புகளை எடுத்துக் கூறிப் பாராட்டியுள்ளார்:

'கானல்,

கழி உப்பு முகந்து, கல்நாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்