பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 65

யை வளவன் படையிழந்து தோற்ருன் என்பதறிந்த கோக் கோதை மார்பன் எனும் சோன் பெருமகிழ்வு எய்தினுன்.

நெடுங் தேர்

இழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூட லாங்கண் வெள்ளத் தான்ையொடு வேறுபுலத் திறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் கடும்பளிப் புரவியொடு களிறுபல வவ்வி ஏதில் மன்னர் ஊர் கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே.’ (அகம் : கூசசு)

கிள்ளிவளவன், பழையன் மாறனெடு செய்த பாண்டி நாட்டுப் போரின் முடிவுகுறித்து மாறுபடுவாரும் உளர். பாண்டிநாட்டுப் போரில், தோற்ருேன் கிள்ளிவளவ னல்லன் ; பழையன் மாறனே : பழையன் மாறன், பேரரசர் பலரும் கண்டு அஞ்சத்தக்க பெரும்படையும் போற்றலும், உடையணுகவே, அவன் படை கண்டு அஞ்சும் அவன் பகைவருள் ஒருவனுய கோக்கோதை மார்பன், அவன் அழிவுகண்டே மகிழ்ந்தான்் என, அவர் கூறுவர் ; ஆணுல், கிள்ளிவளவனப் பாடிய புலவர் எவரும், அவன் பாண்டிநாட்டை வென்முன் என, யாண்டும் கூற வில்லை யாதலாலும், பழையன் மாறன், கிள்ளிவளவன் ஆகிய இருவருள், கருவூரை அழித்து, ஆண்டு அரசோச்சி யிருந்த சோனே அழித்த கிள்ளிவளனே, சேரர்தம் பெரும் பகைவனுவன் ஆகவே, சேரன் ஒருவன், அவன் பெற்ற வெற்றி கண்டு மகிழ்ந்தான்் என்பதினும், அவன் தோல்வி கண்டு உவந்தான்் என்பதே பொருந்துவதாம் ஆதலாலும், பழையன் படைத்தலைவனே யல்லால் பேராசன் அல்ல கைக், கிள்ளிவளவன் பழையனேச் சாய்த்து மன்னர் ஊர் கொண்டான், எனல் பொருங்காது ஆகலாலும், பாண்டி நாட்டில், கிள்ளிவளவன் வெற்றி பெற்றவனல்லன், எனக் கோடலே பொருந்துவதாம்.

கிள்ளிவளவன் பெயர்க்கு முன்வரும், 'குளமுற்றத் துத் துஞ்சி,” என்ற சிறப்பு, அவன் குளமுற்றம் என்னும்

روس.irتي G3