பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சோழர்

கிள்ளிவளவன், தொடுகழற்கிள்ளி, நெடுமுடிக்கிள்ளி, மாவண்கிள்ளி, வென்வேற் கிள்ளி, வடிவேற் கிள்ளி என்ற பெயருடைச் சோழன் ஒருவன் வரலாறு மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளது. அவன் மாவலி மரபினரான பாண அரசர் குடியிற் பிறந்த சீர்க்கி என்பாளே மனேவியாகப் பெற் றவன்; அவள் வயிற்று சித்த உதயகுமரன் என்ற தன் மகன், மணிமேகலையின் பின் திரிந்து, ககாவொழுக்கம் உடையணுக, வித்தியாதரன் ஒருவனுல் கொலேயுண்டான் என்ற செய்திகேட்டு, ' பிழை செய்தவன் தன் மகன் என்றும் பாராமல், தேர்க்காலில் இட்டுக்கொன்று அறங் காத்த அரசன் பிறந்த சோழர் குடியில், இவன் போலும் தியோன் ஒருவனும் பிறந்தனன் என்ற செய்தி பகை யாசர்க்கு எட்டுமுன்னரே, இவனை ஈமத்து ஏற்றிவிடுக” என்று கூறிய உயர்பேரொழுக்கமுடையவன்; இளங்கிள்ளி எனும் பெயருடையனுய தன் தம்பியை அனுப்பிக் காரி யாற்றில் தன்னை வந்தெதிர்த்த சேரனேயும், பாண்டியனையும் வென்று அவர்தம் குடை முதலாயினவற்றைக் கைப்பற்றிக் கொணர்ந்த கொற்றம் உடையவன். ஒருநாள், கடற் கரையில் பேரழகு உடையளாய பெண் ஒருத்தி தன்னக் கண்டு காதல் கொண்டு, ஒரு திங்கள் வரை தன்னே வாழ்ந்து மறைந்துவிட்டாளாக, அவளேக் காணப்பெருது, கடிதுயர் உற்றுக் கலங்கி நிற்புழி, மறைந்தவள் நாகநாட்டு அரசன் வளை வணன் மகள்; பீலிவளே எனும் பெயருடை யாள்; இனி அவள் வாாாள் ; அவள் பெறும் மகனே வருவன்’ எனச் சாரணன் ஒருவன் கூறியனகொண்டு மகனே எதிர்நேக்கி இருந்தான்் முன், நாகநாடு சென்று கடல் வாணிபம் புரியும் கம்பளச் செட்டி எனும் புகார் நகர் வணிகன் ஒருவன், பீலிவளே, தன் மகனேச் சோளுடு கொண்டு சேர்க்குமாறு வேண்டித் கன்பால் அளித்ததாக வும், அவைேடு வருவழிக் கலம் கவிழ்ந்துவிட்டதாகவும், தான்் ஒருவனே பிழைத்து வந்ததாகவும கூறினகை, அது கேட்டு மாத்துயர் உற்று, மகன் பிரிவால் இந்திரவிழா வினே மறந்து மணிமேகலா தெய்வத்தின் ஏவலால் கடல் புகாருட் புகுந்து அழிக்கக் காரணமாயவன்.