பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கோப்பெருஞ் சோழன்

உறையூரைத் தலைநகராகக் கொண்டு, உலகோர்போற்ற நாடாண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழனும் ஒருவன் ; கோப்பெருஞ் சோழனேப் பாடிய புலவர் பலர். அவருள் எவரும், அவன் அரசியல் வாழ்வு பற்றிய எதை யும் கூறினரல்லர் ; புலவரும் போற்றும் புலவயை, அவன் பாடிய பாக்கள் ஏழனுள், எதுவும், அவன் அரசியல் பற்றிய குறிப்பு எதையும் கொண்டிலது ; அவன் பாக்களும், அவ ப் பாடிய புலவர் பாக்களும், நண்பனுய்ப் பழகற்குரிய நல்லோன், மானம் இழந்த பின் வாழா மாண்புடையான் என்று அவன் பண்புடைமைகளையே பாராட்டுகின்றன.

அரசனுய், அறிவுடைப் புலவனுய், மானம் கிறை மக ய்ை வாழ்ந்த கோப்பெருஞ் சோழன், நண்பர் உலகிற்கோர் நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கினன்; உள்ளம் ஒத்தவர்க ளிடையே நட்புத்தோன்றி வளர்தற்கு, ஒரே நாட்டிற் பிறந்து, ஒரே ஊரில் வாழ்ந்து, புணர்ச்சியும், பழகுதலும் மேற்கொள்ள வேண்டுவதில்லை என்ற உண்மையினே உல கறியக் காட்டுதற்கேற்றதோர் எடுத்துக் காட்டாகக் கோப் பெருஞ் சோழன், பிசிராங்தையார் எனும் புலவரொடு கொண்டிருந்த நட்பையே காட்டுவர் அறிஞர் எனின், அவன் நட்பின் சிறப்பின நம்மால் புகழ்தல் ஆகுமோ?

புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான்் நட்பாம் கிழமை தரும்.” (குறள் : எஅடு)

என்ற குறட்பாவிற்கு உரை எழுதிய ஆசிரியர் பரிமேலழ கர், புணர்ச்சி பழகுதல் ஆகிய இவ்விரண்டுமின்றிக் கோப்பெருஞ் சோழனுக்கும், பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத் தாய நட்பினைப் பயக்கு மென்பதாம்,” என இவ்விருவர் நட்பையே எடுத்துக் காட்டுவது காண்க.

தலைம்கள் ஒருத்திபால் உள்ளத்தைப் பறிகொடுத்த கவலேயால், உடல் நலம் கெட்டானெரு கலைமகன், தன்