பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சோழர்

செய்குவங் கொல்லோ கல்வினை எனவே

ஐயம் அரு.அர் கசடீண்டு காட்சி நீங்கா கெஞ்சத்துத் துணிவில் லோரே ; யானை வேட்டுவன் யானையும் பெறுமே ; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே ; அதனல், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னேர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின் தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் ; தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின், மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் , மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்க் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலேயே.”

(புறம் : உகச)

புலவர்கள், அரசன் உள்ளம் உணர்ந்தவாாகலின், அவன் விருப்பத்திற்கு மாருக ஏதும் சொல்லினால்லர் ; மாருக, அவன் ஆற்றும் நல்வினேயினத் தாமும் ஆற்றி, அவன் செல்வழிச் செல்லவேண்டும் என்ற விருப்பின் ராய் அவளுேடு வடக்கிருக்கத் துணிந்தனர். காவிரியாற்றின் இடையே அமைந்தவோர் ஆற்றிடைக் குறையின்கண், நிழல் சேர்ந்த நீண்ட மாத்தின் கீழே, வடக்கிருப்பார் அனைவர்க்கும் இடம் செய்வாராயினர்; அந் நிலையில் கோப்பெருஞ் சோழன், தன் இடத்தையடுத்துப் பிசிராங் தையார்க்கு இடம் ஒதுக்குமாறு பணித்தனன். அரசன் கூறுவன கேட்ட ஆண்டிருந்த புலவர்கள், அரசே ! ஆங்தையார், கின் பெயரும், புகழும் கேட்டவரே அல்லால், கின்னேக் கண்டு பழகியவால்லர் ; மேலும், கின்னே அறிந்து இத்தனே ஆண்டுகள் ஆகியும், ஒரு முறையேனும் ஈண்டு வந்தவரல்லர்; மேலும், அவர் உள்ள இடமோ மிக மிகச் சேய்மைக்கண்ணத ; ஆகவே, கின் சிலை அறிந்து, ஈண்டு வந்து பின்னெடு வடக்கிருத்தல் இப்போது இயலாது ; ஆகலின், அவர்க்கு இடம் ஒழிப்பது வீண் அன்ருே ' என்றனர்.