பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 83

விடல்” (குறள் : எடுடு) எனக் கூறுவர் பெரியோர். இந்தப் பண்பாட்டுள்ளம் கோப்பெருஞ் சோழன்பாலும் குடி கொண்டிருக்கக் காண்கிருேம்; ஒரு தலைவன் பொருள்வயின் பிரியக் கருதியதைக், தோழி கலைமகட்கு உணர்த்தினுள் ; அதுகேட்ட தலைவி, ' தோழி! அருளேயும், அன்பையும் அறவே மறந்துவிட்டுப் பொருள்வயின் பிரிகல் அறஉள். ளம் உடையார்க்கு இயலாது ; அருளும், அன்பும் அற்ற தன்மை உரம்பெற்ற உள்ளமுடையார்க்கே அஃது இயலும்; நம் தலைவர்க்கு அத்தகைய உள்ளஉரம் உண்டாயின், அவர் அன்பும், அருளும் அற்றவராயின் பொருள்வயின் பிரிக!” எனக் கூறினுள் எனப் பாடிய இப் பாட்டில் கோப்பெருஞ் சோழனுர் தம் உள்ளம் தோன்றுவது உணர்க !

'அருளும், அன்பும் நீக்கித் துணை துறந்து

பொருள்வயின் பிரிவோர், உாவோ ராயின் உரவோர் உாவோ சாக.” (குறுங் : உ0)