பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சோழர்

பெரும்பூட் சென்னி யென்பாளுேடு சோழ வேந்தன், சேர நாடு புகுந்து அந் நாட்டுக் கழுமலம் எனும் கரை முற்றுகையிட்டான் ; கழுமல நகர் அாணுள், கன்னன், எற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை போன்ற பெரு வீரர்கள் கூடியிருந்தனர் ; சோழன் படைத்தலைவனுகிய பழையன் என்பான், அவ்வரணின் திண்மை கண்டும் அஞ் சாது கடும் போரிட்டான்; பருந்துகள் பெருங் கூட்ட மாய்ச் சுற்றிக் கிரியுமாறு களம் முற்றும் பிணங்கள் வீழ்ந் தன; ஆயினும், அப் போரில் அவன் தன் உயிரை இழங் தான்் ; கன் படைத்தலைவன் இறந்தான்் என்பதறிந்த சோழன் பெருஞ்சினம்கொண்டு களம்புகுந்து, கோட் டைத் தலைவனுய கணையன் என்பானையும், அவன் காத்து கின்ற அவ்வாணையும் கைக்கொண்டான் என்ற நிகழ்ச்சி யொன்றைக் குடவாயிற் கீரத்தனர் என்ற புலவர் கூறியுள்

6卯广g 为 *

'நன்னன் எற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி பொன்னணி வல்வில் புன்றுறை என்ருங்கு அன்றவர் குழிஇய அளப்பரும் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டு அது நோனன் ஆகித் திண்தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையலம் கண்ணிப் பெரும்பூண் சென்னி.", -- - -

\,...}{; , (یونی "یایی) குடவாயிற் கீரத்தனர் கூறும் இக் கழுமலப் போர், கணக்காலிரும்பொறைக்கும், செங்கணுலுக்கும் நடந்த போராம் ; ஈண்டுக் கூறப்படும் கணையனும், பெரும்பூண் சென்னியும் முறையே கணக்கால் இரும்பொறையும், செங்கணுனுமாவர் எனக் கோடல் பொருந்தும்.

சோழன் செங்கணுனே, "உலக மாண்ட தென்னுடன்; குடகொங்கன் ; சோழன்”, தென் தமிழன் வடபுலக் கோன்', ' கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் ', ' விறல் மன்னர்