பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்களுன் 87

திறல் அழிய வெம்மாவுய்த்த செங்களுன் ”, படைமன் னர் உடல் துணியப் பரிமாவுய்த்த தேர்ாளன் ' என்றெல் லாம் பாராட்டும் திருமங்கை யாழ்வார், அவன், தமிழ் நாட்டில் சிவனுக்குரிய கோயில்கள் எழுபது அமைத்துச் சிறப்புற்ருன் என்றும் கூறியுள்ளார் :

"இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளிசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்.” அம்பர், வைகல், கன்னிலம் முதலாய இடங்களில் அமைந்துள்ள சிவன் கோயில்கள் எல்லாம், கோச்செங்கட் சோழன் திருப்பணியே என்று கூறுகின்றனர், சம்பந்தரும், சுந்தாரும். செங்கணுன், முற் பிறவியில் சிலந்தியாய்ப் பிறந்தவன் என்றும், திருவானேக்காவில், நாவலடியில் அமர்ந்த இறைவனே வழிபடும் அச் சிலந்தி, இறைவன் மீது இலை முதலாயின விழாமை குறித்துத் தன் வாயின் நூலால், அவ்விறைவன் தலைமீது வலை பின்னி வழிபட்டு வந்தது ; அச் சிலந்தியைப் போன்றே, அவ்விறைவனே வழி படும் யானே, அவ்விறைவன் மீது வலை கிடப்பது கண்டு வருக்தி நாள் தோறும் அதை அழித்த வழிபட்டது; தான்் அன்புடன் பின்னும் வலையை அழிக்கும் யானைமீது சினங்கொண்ட சிலந்தி, அதன் துதிக்கையுட் புகுந்து துயர் விளேத்தது ; அதனல் யானே இறந்தது; இறக்கும் யானே, தன் கையை வலி பொறுக்கமாட்டாது ஓங்கி அடித்ததாக, அதனுட் கிடந்த சிலந்தியும் இறந்தது ; இறந்த சிலந்தி, சுபதேவன், கமலவதி ஆகியோர் இயற்றிய அருந்தவப் பயனுய் அவர்க்கு மகனுய்ப் பிறந்தத ; பிறந்த மகனுக்குச் செங்களுன் எனும் பெயரிட்டுப் பாராட்டினர். வளர்ந்து அரியணை ஏறிய செங்களுன், சிவனுறையும் தலங் தோறும் கோயில் அமைத்து வழிபட்டான் என்ற ஒரு கதையினேக் கூறுவர் சேக்கிழார். கூறுவார் கூறுவன எல் லாம் கொண்டு நோக்கின், செங்களுன் சிறந்த போர் வீரன் ; புலவர்பால் பேரன்புடையவன் ; இறைவன் திரு வடிக்கண் நீங்காப் பேரன்புடையவன் என்பன புலம்ை.