பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி

வேளிர்க்கு உரிய ஊர்களுள் பாழி என்பதும் ஒன்று; சேரநாட்டைச் சேர இருந்த இப்பாழி, அவ்வேளிருட் சிறந் தான்ுகிய நன்னன் என்பானுக்கு உரியதாய் இருந்தது; ஆஅய் எயினன் என்பான் நன்னனெடு பகைகொண்டிருந் தான்்; அவனேப் பாழியில் எதிர்த்துக் கொன்ருன், நன்னன் நண்பன் மிகுதிலி என்பான்; இவ்வாறு தனக்கு அருங் துணை புரிந்த ஆருயிர் நண்பன் மிகுதிலிக்குத் தனக்குரிய பாழி ஆட்சிப் பொறுப்பை, நன்னன் அளித்தான்்; ஏழில்மலையை அடுத்திருந்த பாழி, இயற்கை, செயற்கை யாய இருவகை அரண்களையும் பெற்றிருத்தல் அறிந்த வேளிர், தம் பெரும்பொருளே ஆண்டுத்தொடுத்து வைத் துப் போற்றி வந்தனர்; அரனுடைமையாலும், பொருள் உடைமையாலும் பாழி சிறந்திருந்தமையின், அதைக் கைப்பற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்ற ஆசை, அக்கால அரசர் அனைவர் உள்ளத்திலும் உறுதியாக இடம்பெற்றி ருந்தது; பாழியை வடுகரும் கைப்பற்றிச் சிலநாள் ஆண்டி ருந்தனர்; இதல்ை, பாழி, பலரும் கூடிப் பொரும் பெரும் போர்க்களமாய்க் காட்சி யளித்தது; அதனல், புலவரும், பிறரும், பாழியைப் போர் கிறைந்த பாழி எனும் பொருள் படச் செருப்பாழி எனச் சிறப்புப் பெயரிட்டு அழைப்பா

ாாயினர்.

பிற அரசர்களைப் போன்றே, சோழரும் பாழி கக

ரைக் கைப்பற்ற அரும்பாடு பட்டனர்; அதைக் கைப்பற்று வது கம் குடிக்கடனும் என்றே கருதினர்; ஆயினும், அம் முயற்சி இளஞ்சேட்சென்னி காலம்வரை குறைவினை யாகவே இருந்தது; இறுதியில் இளஞ்சேட்சென்னியே, பாழியைப் பற்றி, ஆங்கு ஆண்டிருந்த வடுகரை வென்று அழித்துத் தம் குடிக்கடற்ைறின்ை:

'சோழர் பெருமகன்,

விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி