பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சோழர்

இரக்கும் குறையரசு அறியான் : மண்டமர் கடக்கும் மத லுடையாளன் என, அவன் பண்பு பலவற்றையும் பாரறியச் செய்தல் காண்க.

நலங்கிள்ளி, சேர, பாண்டிய மன்னர்களின் இரு குடைகளும் பின்னே கிற்கத் தன் குடைமட்டுமே உயர்ந்து முன்னே விளங்குதல் வேண்டும் என்ற ஆர்வமுடையவன். வெற்றிப் புகழே விரும்பும் அவன், அதைப் பெறும் கருத் துடையணுய், எப்பொழுதும் படைகளோடு பாசறைக்கண் வாழ்தலை விரும்புவனேயல்லால், நகர் வாழ்தலை நச்சுவா னல்லன் , அவன் படையைச் சேர்ந்த யானைகளும், பகை வர்தம் பேரரண்களைத் தம் கோடு மழுங்கக் குத்தி அழிப் பதையே விரும்புவதல்லது, அமைதியாய் இருக்க விரும்பா; அவன் படை மறவரும், பகைவர் நாடு, இடையில் காடும் மலையும் கிடக்க மிகச் சேய்மைக் கண் உளது ; ஆண்டு எவ்வாறு செல்வேம் எனத் தயங்காது, போர் என்றவுடனே பூரிக்கும் தோளினாாவர். கலங்கிள்ளியின் இயல்பும், அவன் படை இயல்பும் உணர்ந்த வடநாட்டரசர், கலங் கிள்ளியிள் பெரும்படை எந்த நேரத்தில் தம் நாட்டுட் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தால் உறக்கம் பெருது உறு துயர் உறுவா.

இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை உருகெழு மதியின் நிவந்து சேண் விளங்க நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல்லாயே ; நூதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னர் கடி மதில் பாயும் நின் களிறடங் கலவே , போரெனிற் புகலும் புனைகழல் மறவர் காடிடைக் கிடந்த நாடு கனி சேய செல்வே மல்லேம் என்னர் ;

வலமுறை வருதலும் உண்டென்று அலமந்து கெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தாசே." (புறம்: க.க)