பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லுருத்திான் 109.

இயைந்த கேண்மை இல்லா கியரோ! கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ச்தென அன்றவண் உண்ணு தாகி வழிநாள் பெருமலே விடாகம் புலம்ப வேட்டெழுந்து இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடையாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உளவா கியாோ? (புறம் : க.க)

காடும், காடுசார்ந்த இடமுமாகிய முல்லை கிலத்தில், ஆடு, மாடு, எருமை முதலாயின காத்தலும், வரகுபோன்ற புன்செய்ப் பொருள்களே உளவாக்கலுமாய தொழில் மேற் கொண்ட ஆயர்தம் வாழ்க்கையினே வகுத்துரைப்பார் போல், அவ் வாயர் மகளிர்கம் கற்பின் மாண்பினைக் காவி யப் பொருளாக்கிப் பாடுவதாய முல்லைத்திணை பாடவந்த நல்லுருத்திரன், ஆடு காப்பர் புல்லினத்து ஆயர் ; மாடு காப்பர் நல்லினத்து ஆயர் : எருமை காப்பர் கோட்டி னத்து ஆயர் என ஆயரை அறிமுகம் செய்து, தந்தை கிரை மேய்ப்பன் ; தாய் கினே கொய்வள்; மகன் பயிர் செங்வன் ; மகள், கிரை மேய்க்கும் தந்தைக்குக் கறவைக் கலம் கொண்டு கொடுத்தலும், புனத்துளானுக்கு உணவு கொண்டு சேறலும், கினே அரிதாள் மேயும் கன்று களைக் காத்தலும் செய்வள் என அவ் வாயர் தொழில் இது என எடுத்துக் கூறி, இறுதியாக,

'விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்,

அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல்லியல் பன்று.”

என அவ் வாயர் மகளிர்தம் கற்பின் மாண்பினை மனதாரப் பாராட்டியுள்ளார்.