பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுங்கிள்ளி 111

கிடைக்கப்பெருமல் குழந்தைகள் கதறிக் கதறி அழுதன; மலர் சூட்டும் மகிழ்ச்சியிலாய் மகளிர் தம் கூந்தலை வறிதே கோதி முடித்தனர் ; மனவளம் அற்றதறிந்து, ஆண்டு வாழ்வார் அழுது அரற்றினர்; இவற்றையெல்லாம் கண்டும், கேட்டும் நெடுங்கிள்ளி யாதும் செய்யானுயிஞன் ; இந் நிலையினைக் கோவூர் கிழார் எனும் புலவர் உணர்ந்தார்; அரசர் இருவர் பகைமையால் அானகத்தோர் அழிவதை விரும்பாக அவர், அரனுட் புகுந்து, நெடுங்கிள்ளிமுன் நின்று, ஆண்டு மக்களும் பிறரும் படும் மனத்துயரை எடுத்துக்காட்டி, "இனியும் அடங்கியிருத்தல் அழகன்று : அறம் கிற்கும் உள்ளத்தணுயின், மாற்ருன்கை ஒப்படைத்து வெளியேறு ஆற்றல் நிறைந்தோணுயின், வாளேந்திப் போரிட வெளியேறு ; அறமோ, மறமோ இன்றி மறைந்து வாழ்தல் மாண்புடைத்தன்று,” என்று அறவுரை கூறினர்.

இரும்பிடித் தொழுகியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெரு.அ திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து அலமால் யானை உருமென முழங்கவும், பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலே முடிப்பவும், நீரில் வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும், இன்ன தம்ம ஈங்கினி கிருத்தல் , துன்னருங் துப்பின் வயமான் தோன்றல் அறவையாயின் இனிதெனத் திறத்தல் மறவை யாயின் போரொடு கிறக்கல் அறவையும் மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் ண்ேமதில் ஒருசிறை ஒடுங்குதல் நானுக்கக வுடைத்து இது காணுங் காலே.”

(புறம்: சச) புலவர் அளித்த, பொருள் நிறைந்த அறிவுரையைப் பொன்னேபோல் போற்றுதல் வேண்டும் என கினேந்த