பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சோழர்

மறுவலும் கொடேன்’ எனக்கூறி மறுத்துவிட்டால், அவர் வாழ்வு வளமற்றுப் போய்விடும்; ஆதலின், இாவலரைப் பேணிப் புரப்பது வாழ்வின் கடன் எனக் கொள்வாயாக' எனக்கூறி வாழ்த்தினர்:

'கழிந்தது பொழிந்து என வான்கண் மாறினும்,

தொல்லது விளைந்தென நிலம்வளம் காப்பினும், எல்லா வுயிர்க்கும் இல்லால் வாழ்க்கை; இன்னும் தம்மென எம்மனுேர் இாப்பின், முன்னும் கொண்டிர் என தும் மனேர் மறுத்தல் இன்னது அம்ம இயல்தேர் அண்ணல்’ (புறம்: உ0ங்) ஊன்பொதி பசுங்குடையாரால், ஈண்டுப் பாராட்டப் பெற்ற, சோமான் டாமுளூர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட்சென்னியும், அவரால் பாராட்டப் பெற்ற, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியும், கரிகாற் பருவளத்தான்் தந்தையாய், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி எனும் பெயர்பூண்ட சோழன் ஒருவனே ஆதல் கூடும் என்பதை, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்ற தலைப்பின் கீழ் விளங்க விரித்துரைத் துள்ளேன்; ஆண்டுக் கண்டு உண்மையுணர்க.