பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாண்டியர்

அரசுகள்,” எனப் பாராட்டியுள்ளான் எனின், இவ் வாக களின் பழமை, பெருமைகளை மேலும் விளக்குதல் வேண்டுமோ ?

சேர, சோழ, பாண்டியர் மூவரும் ஒரு தாய்வயிற்றில் பிறந்தோர் எனவும், அவர்கள் தென்னுட்டில் நாகரிக வளர்ச்சிக்குத் தோன்று மிடமாகிய காமிரவருணி யாற் றின் கரையில், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்து வந்தனர் எனவும், பின்னர், யாது காணத் தாலோ, அவர்கள் தம்முள் பிரித்தனர் எனவும், அவருள் பாண்டியர் ஆங்கேயே கிலத்துவிட்டன ராக, ஏனே இருவரும் முறையே மேற்கினும், வடக்கினும் சென்று தங்கள் கங்கள் பெயரால் தனியரசு அமைத்துக்கொண்டனர் எனவும் பழைய வரலாறுகள் கூறுகின்றன.

மூவேந்தர் காடுகள் மூன்றும், சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என வழங்கப்பெறுதலோடு, அவை முறையே, 'குடபுலம், குணபுலம், தென்புலம்,” என அவை அமைந்துள்ள திசையானும் அழைக்கப்பெறும், இது, அந் நாடுகாவல் மேற்கொண்டாரை முறையே, குட புலம் காவலர் பெருமான், குணபுலம் காவலர் பெரு மான், தென்புலம் காவலர் பெருமான்,” எனப் பெய ரிட்டுச் சிறு பாணுற்றுப்படை அழைப்பதால் புலனும். இவற்றுள், குடபுலம் என்பது, கொல்லிமலையை உள் அடக்கிய தமிழகத்தின் மேல்பால் கிலப்பகுதியும், குண புலம் என்பது, அக் கொல்லிமலைக்கும், அம் மலையினின்று தோன்றி ஒடும் கரைபோட்டா னற்றிற்கும் கீழ்ப்பாலுள்ள நிலப்பகுதியும், தென் புலம் என்பது, பழனிமலைத் தொடர்க்குத் தெற்கணுள்ள கிலப்பகுதியுமாம்.

சீதையைத் தேடிச்செல்லும் வானர் வீரர்பால், தெற்கே கபாடபுரம் என்றொரு நகர் உண்டு ; அதன் வாயிற் கதவுகள் பொன்னும், முத்தும் வைத்திழைக்கப் பெற்ற வனப்புடையன என்று கூறினன் சுக்கிரீவன் என வான்மீக இராமாயணம் கூறுவதும், குமரியாடும் குறிப் போடு தென்னடு போந்த அர்ச்சுனன், பாண்டியன் மகளே