பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாண்டியர்

சோர்க்கும், சோழர்க்கும். இல்லாத் தனிச் சிறப்புற்ற தென்னவர், அவ் விருவர்க்கும் இல்லாப் பெரும் பகை யொன்றையும் பெற்றிருந்தனர்; பாண்டி நாட்டார், மக்கட் பகையோடு, கடல்கோள் போலும் இயற்கைப்பகை யோடும் போராட வேண்டியவராயினர் ; காய்கின வழுதி முதலாக் கடுங்கோன் ஈருகவுள்ள பாண்டியர் எண்பத் தொன்பதின்மர் இருந்த ஆட்சி புரிந்ததும், முதற்சங்கம் இடம் பெற்றதுமாய தென் மதுரையைத் தலைநகராக் கொண்ட அவர் நாடு, கடலால் அழிவுற்றது முதற்கண்; இக் கடல்கோளால் பாண்டியர் இழந்த நாடுகள், பஃறுளி என்னும் ஆற்றிற்கும், குமரி என்னும் ஆற்றிற்கும் இடைப் பட்ட ஏழ்தெங்க நாம்ே, ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலே நாடும், ஏழ்பின்பாலே நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குண காரை நாடும், ஏழ்குமம்பனே நாடும், குமரி கொல்லம் முதலாம் பன்மலை நாடும், உள்ளடக்கிய பெருகிலப் பாப் பாம் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு: வேனில்: க-உ; உரை) இக் கடல்கோட்குப் பின்னர்ச் சிறிதுவடக்கே போந்து கபாடபுரத்தைத் தலைநகராக் கொண்டு ஆண்டு வந்தனர்; வெண்தேர்ச் செழியன் முதலாக, முடத்திரு மாறன் ஈருகவுள்ள ஐம்பத்தொன்பதின்மர் ஆட்சி புரிந் தனர்; ஆனால், அங்கோ I அக் காடும் கடலால் அழிவுற்றது; இம் முறை, பஃறுளியாறும், பன்மலை அடுக்கினேயுடைய குமரி மலையும் அழிவுற்றன என்பர், இளங்கோவடிகள் :

'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள.”

(சிலம்பு, க.க : க.க-உ0) இவ்வாறு தெற்கண் நாடு பல இழந்த பாண்டியர், அதனுல் மனங்குன்றின சல்லர் ; அவர்கள் ஆண்டு எவ்வளவு காடுகளை இழந்தனரோ, அவ்வளவு நாடுகளைத் தம் நாட்டின் வட பகுதிக்கண் வென்று ஆட்சி புரிவா ாயினர்; இறுதியாகக், கூடல் எனும் ப்ெயர் பூண்ட இன்றைய மதுரையைத் தலைநகராகக் கொண்டு அவர் கண்டநாடே இற்றைகாள்வரை அழிவுற்றிலது ; ஆனல் அந்தோ அந் நாடு கண்ட அவர் அரசு அழிந்துவிட்டது.